ஆர்மீனிய இராச்சியம் பண்டைய அண்மை கிழக்கில் கிமு 321 முதல் கிபி 428 முடிய விளங்கியது. இதனை மூன்று அரச வம்சத்தினர் ஆண்டனர். [5][6] யேர்வந்தசத் வம்சத்தினர் கிமு 331–210 வரையும், அர்தசியாத் வம்சத்தினர் கிமு 189 முதல் கிபி 12 வரையும், அர்சசித் வம்சத்தினர் கிபி 52 முதல் 428 முடியவும் ஆண்டனர்.
கிமு 69-இல் உரோமைப் பேரரசு செலுக்கியப் பேரரசை வீழ்த்தி ஆர்மீனியாவைக் கைப்பற்றியது. கிபி 12 வரை ஆர்மீனியா உரோமைப் பேரரசின் கிழக்கு மாகாணங்களில் ஒன்றாக விளங்கியது.
உரோமை-பார்த்தியப் போர்களின் (கிமு 54 – கிபி 217) போது, கிபி 52-இல் ஆர்மீனியா இராச்சியத்தின் அர்சசித் வம்சத்தினர் தங்களது முடியாட்சியை நிறுவினர்.
உரோம-பார்த்தியப் போர்களின் போது ஆர்மீனிய இராச்சியத்தினர் கடுந்துயரம் அடைந்தனர். கிபி 114 - 118 வரை ஆர்மீனியா உரோமைப் பேரரசர் திராயான் கீழ் சிற்றரசாக விளங்கியது. பின்னர் பைசாந்தியப் பேரரசு மற்றும் சாசானியப் பேரரசு கீழ் ஆர்மீனியா சென்றது. கிபி 301-இல் ஆர்மீனியா இராச்சிய மக்கள் ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபையின் கிறித்துவத்தை பின்பற்றினர்.
ஆர்மீனியா இராச்சியத்தில் ஆர்மீனியம், கிரேக்கம், அரமேயம் மற்றும் ஈரானிய மொழிகள் பேசப்பட்டது.
பைசாந்தியப் பேரரசு-சாசானியப் பேரரசுகளிடயே கிபி 387-இல் நடைபெற்றப் போரின் முடிவில், பைசாந்திய ஆர்மீனியா என்றும், கிபி 428-இல் சாசானிய ஆர்மீனியா என்றும் பிரிக்கப்பட்டது.
1915 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் துருக்கிய ஒட்டோமன் பேரரசினர் ஆர்மீனியக் கல்விமான்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் 250 பேரை கொன்ஸ்டண்டீனப்போல் நகரில் கைது செய்தனர்[7]. அதன் பின்னர் இராணுவத்தினர் மத்திய கிழக்கில் வாழ்ந்த ஆர்மீனியப் பொதுமக்களை வெளியேற்றி படுகொலை செய்யப்பட்டனர். பெரும்பான்மையான ஆர்மீனியர்கள் புலம்பெயர்ந்து தற்கால ஆர்மீனியா போன்ற நாடுகளில் வசிப்பது இப்படுகொலைகளில் இருந்து தப்பியவர்களே.
↑Russel, James R. (1987). Zoroastrianism in Armenia (Harvard Iranian series). Harvard University, Department of Near Eastern Languages and Civilizations. ISBN978-0674968509. The Parthian Arsacids who came to the throne of Armenia in the first century A.D. were pious Zoroastrians who invoked Mithra as the lord of covenants, as is proper. An episode which illustrates their observance of the cult is the famous journey of Tiridates to Rome in A.D. 65-66. (...)
↑Britannica, Istanbulபரணிடப்பட்டது 2007-12-18 at the வந்தவழி இயந்திரம்:When the Republic of Turkey was founded in 1923, the capital was moved to Ankara, and Constantinople was officially renamed Istanbul in 1930.
மேலும் படிக்க
M. Chahin, The Kingdom of Armenia (1987, reissued 1991)
Ashkharbek Kalantar, Armenia: From the Stone Age to the Middle Ages, Civilisations du Proche Orient, Se´rie 1, Vol. 2, Recherches et Publications, Neuchâtel, Paris, 1994;பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-2-940032-01-3
Ashkharbek Kalantar, The Mediaeval Inscriptions of Vanstan, Armenia, Civilisations du Proche-Orient: Series 2 – Philologie – CDPOP 2, Vol. 2, Recherches et Publications, Neuchâtel, Paris, 1999;பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-2-940032-11-2
Ashkharbek Kalantar, Materials on Armenian and Urartian History (with a contribution by Mirjo Salvini), Civilisations du Proche-Orient: Series 4 – Hors Série – CPOHS 3, Neuchâtel, Paris, 2004;பன்னாட்டுத் தரப்புத்தக எண்978-2-940032-14-3