மூன்றாவது ஊர் வம்ச நிறுவனர் ஊர்-நம்முவின் உருளை முத்திரை, கிமு 2047[1] முத்திரையில் ஊர்-நம்முவின் பெயர், வலது புறத்தின் மேல் பகுதியில் செங்குத்தாக எழுதப்பட்டுள்ளது (𒌨𒀭𒇉).மூன்றாம் ஊர் வம்ச இராச்சியமும், அதன் தாக்கத்தை ஏற்படுத்திய பிரதேசங்களைக் காட்டும் வரைபடம்சுட்ட செங்கல்லில் மூன்றாம் ஊர் வம்ச மன்னர் அமர்- சின்னின் பெயர் பொறித்த தொல்பொருள், பிரித்தானிய அருங்காட்சியகம்
மூன்றாவது ஊர் வம்சம் (Third Dynasty of Ur) அல்லது புதிய சுமேரிய பேரரசு என்பது மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த ஊர் நகரத்தை தலைநகராகக் கொண்டு பாபிலோனியவைக் கிமு 2112 முதல் 2004 முடிய 108 ஆண்டுகள் ஆண்ட இறுதி சுமேரிய வம்சம் ஆகும்.[2][3]