கிமு 26ம் நூற்றாண்டின் நடுவில் அழிக்கப்பட்ட மாரி நகரம், கிமு 2500ல் மீண்டும் சீரமைக்கபப்ட்டது. மாரி நகர இராச்சியத்தினர், எப்லா இராச்சியத்தினருடன் கடும் பகை கொண்டிருந்தனர். மாரி நகரம் கிமு 23ம் நூற்றாண்டில், அக்காடியப் பேரரசால் கைப்பற்றப்பட்டு, அக்காதிய இராணுவ படைத்தலைவர்களால் கிமு 19ம் நூற்றாண்டு வரை ஆளப்பட்டது. பின்னர் கிமு 1761ல் மாரி நகரம், பாபிலோனியோ இராச்சியத்துடன் இணைக்கப்பட்டு, அசிரியர்களாலும், பாபிலோனிலோனியர்களாலும் ஆளப்பட்டது. கிமு 4ம் நூற்றாண்டில் ஹெலனியக் காலத்தில் கிரேக்கர்களால் மாரி நகரம் முற்றிலும் அழிக்கப்பட்டது.
மாரி நகர இராச்சிய மக்கள் சுமேரிய கடவுள்களை வணங்கினர். மேற்கு செமிடிக் மொழிகள் பேசிய அமோரிட்டு மக்கள் மாரி நகரத்தில் கிமு 21ம் நூற்றாண்டிற்கு முன்னர் தங்கள் குடியிருப்புகளை நிறுவினர். கிபி 1933களில் மாரி நகரத்தின் தொல்லியல் களங்களை அகழாய்வு செய்தனர். மாரி தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட, ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்ட 25,000 களிமண் பலகைகளில், கிமு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மாரி நகர ஆட்சி நிர்வாகம், அண்டை நாடுகளுடன் கொண்டிருந்த இராஜதந்திர உறவுகள் எடுத்துரைக்கிறது. மாரி நகர இராச்சியத்தினர் கிமு 1800ல் சைப்பிரசு, கிரீட் போன்ற மத்தியதரைக் கடல் தீவு நாடுகள் மற்றும் ஆப்கானிஸ்தானுடன் கொண்டிருந்த வணிக உறவுகள் சுட்ட களிமண் பலகைகளில் எழுதப்பட்ட குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது
பெயர்க் காரணம்
மெசொப்பொத்தேமியா மக்கள் வழிபட்ட மெர் என்ற புயல் தேவதையின் பெயரால் இந்நகரத்திற்கு மாரி எனப்பெயராயிற்று.[1][2]
முதலில் சிற்றரசாக இருந்த முதலாம் மாரி நகர இராச்சியம் படிப்படியாக வளர்ந்து,[3]கிமு 2900ல் பெரிய நகர இராச்சியமாக உருவெடுத்தது. இக்காலத்தில் மாரி இராச்சியத்தினர் லெவண்ட் மற்றும் தெற்கின் சுமேரியாவின் வணிகப் பாதைகளை இணைக்கும் யூப்பிரடீஸ் ஆற்றுப் பகுதிகளை கைப்பற்றினர். [3][4]
மாரி இராச்சியத்தினர் , யூப்பிரடீஸ் ஆற்றிற்கு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மாரி எனும் நகரத்தை அமைத்தனர்.[3] மாரி நகரம் கிமு 2550ல் அழிந்த காரணம் அறியப்படவில்லை.[4]
கிமு 2500ன் முற்பகுதியில் இரண்டாம் மாரி இராச்சியத்தினர் மெசொப்பொத்தேமியாவின் தற்கால சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் பகுதிகளை ஆட்சி செய்தனர். [5][4][6] இரண்டாம் மாரி இராச்சியத்தின் தலைநகரமான மாரி நகரத்தை மறுசீரமைத்து இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவில், ஆறடி அகலத்தில் உயரமான சுவர்களை எழுப்பினர். மேலும் சுவர்கள் மீது வில் வீரர்கள் காவலுக்கு நிற்க
வைக்கப்பட்டிருந்தனர். [4][7][7][4]
இரண்டாவது மாரி இராச்சிய மன்னர் இக்கு-சாமகன் சிற்பம், கிமு 25ம் நூற்றாண்டு
பின்னர் இப்பழைய நகரத்தை சீரான தெருக்களுடன் சீரமைத்து கட்டப்பட்ட புதிய நகரத்தில் கழிவு நீர் மற்றும் மழைநீர் வடிகால்களுடன் அமைக்கப்பட்டது. [4]
மாரி நகரத்தின் மையத்தில் அமைக்கப்பட்ட அரண்மனை, கோயிலாகவும் செயல்பட்டது. [4]
மாரி நகரத்தின் தொல்லியல் களங்களை அகழாய்வு செய்த போது, கோயிலுக்கு செல்லும் வழியில் மூன்று இரட்டை மரத் தூண்கள், சிம்மாசன அறை மற்றும் ஒரு மண்டபம் கண்டெடுக்கப்பட்டது.[8] மேலும் ஆறு கோயில்களின் இடிபாடுகள் மாரி நகர தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்டது. [9] மேலும் மாரி நகரத்தில் சுமேரியக் கடவுள்களானஇஷ்தர் மற்றும் உது தெய்வங்களின் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது.[10]
செல்வாக்குடன் விளங்கிய இரண்டாம் மாரி நகர இராச்சியம், பண்டைய அண்மைக் கிழக்கில் அரசியல் மையமாக விளங்கியது.[5] மாரி இராச்சிய மன்னர்கள் லுகல் எனும் பட்டப் பெயரில் ஆட்சி செய்தனர்[11]எப்லா இராச்சியத்தின் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட குறிப்புகள், எப்லா இராச்சியத்தினர், மாரி இராச்சியத்தினருக்கு பரிசுகள் வழங்கியதை குறித்துள்ளது.[12]|group=note}}[13]
மாரி - எப்லா போர்
மாரி இராச்சியத்தின் உருளை வடிவ சுடுமண் பலகையின் சிற்பங்கள் மற்றும் ஆப்பெழுத்துகள், கிமு 25ம் நூற்றாண்டு
மாரி இராச்சிய மன்னர் அன்சுத் என்பவர் எப்லா இராச்சியத்தின் மீது பல்லாண்டுகள் போரிட்டு, எப்லா நகரத்தைக் கைப்பற்றினார்.[14]
மன்னர் சாமு காலத்தில் ராஅக் மற்றும் நிரும் நகரங்களை கைப்பற்றினார். கிமு 24ம் நூற்றாண்டின் நடுவில், எப்லா இராச்சியத்தினர் வலிமை இழந்த காலத்தில், மாரி நகர இராச்சியத்தினருக்கு கப்பம் செலுத்தினர்.[15][16] மாரி இராச்சிய மன்னர் என்ன - தாகன், அண்டை நாட்டு எப்லாவிடம் திறை வசூலித்தான்;[16] பின்னர் அவனது மாரி நகர இராச்சியம், எல்பாவின் மன்னர் இர்கப் - தாமுவிடம் வீழ்ந்தது.[17][18]
எப்லாவிற்கும், வடக்கு மெசொப்பொத்தேமியா வழியாக தெற்கு பாபிலோன் நகரத்திற்கு செல்வதற்கான வணிகப்பாதைகளை, மாரி இராச்சியத்தினர் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் அடைத்தனர். [19] இதனால் எல்பா மற்றும் சுமேரிய மன்னர்களின் கூட்டணிப்படைகள் ஒன்று சேர்ந்து கிமு 2300ல் மாரி இராச்சியப்படைகளை தோற்கடித்தது. [20][21]
மாரியின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மன்னர் இஸ்கியின் அரச முத்திரையில் போர்க் காட்சிகள், எப்லா நகரத்தின் அழிவுகள் குறித்து விளக்குகிறது.[22][23]கிமு 2300ன் நடுவில் எப்லா நகரத்தின் அழிவிற்கு பத்தாண்டுகளுக்குப்பின் மாரி நகரத்தை அக்காடியப் பேரரசர்சர்கோன் எரித்தார்.
[20][24]
மூன்றாம் மாரி இராச்சியம்
மூன்றாம் மாரி இராச்சியம்
மாரி
கிமு 2266–கிமு 1761
கிமு 1764ல் மன்னர் சிம்ரி - லிம் காலத்திய மாரி இராச்சியம் (பச்சை நிறத்தில்)
மாரி இராச்சியம் இரண்டு தலைமுறை காலத்திற்குள் சிதைந்து போனது. பின்னர் அக்க்காடிய மன்னர் மனிஷ்துசு என்பவர் மூன்றாம் மாரி இராச்சியத்தை கட்டமைத்தார்.[25]கிமு 2266ல் மாரி இராச்சியப் பகுதிகளை நிர்வகிப்பதற்கு, அக்காடியப் பேரரசர் சக்கநக்கு பட்டத்துடன் கூடிய ஒரு படைத்தலைவரை ஆளுநராக நியமித்தார்.[26]அக்காடியப் பேரரசு வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த காலத்தில், மாரி நகரத்தின் இராணுவ ஆளுநர் வம்சத்தினர் கிமு 19ம் நூற்றாண்டின் அரைப்பகுதி வரை மாரி இராச்சியத்தை தன்னாட்சியுடன் ஆண்டனர். மூன்றாம் மாரி இராச்சியத்தில் தற்கால சிரியா மற்றும் ஈராக் நாடுகள் அடங்கியிருந்தது.
மாரி நகரத்தின் சிங்கச் சிற்பம், கிமு 22ம் நூற்றாண்டு
கிமு 1830ல் அமோரிட்டு மக்கள் மாரி இராச்சியத்தின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி ஆண்டனர். மாரி தொல்லியல் களத்தில் கிடைத்த கல்வெட்டுகள், குறிப்புகளிலிருந்து அமோரிட்டு மக்களும், அக்காடிய ஆளுநர்களும் மாரி இராச்சியத்தின் பகுதிகளை ஆண்டதாக கருதப்படுகிறது. [27]|group=note}}[27]
சுப்ரும் பகுதியின் யாக்கிட்-லிம் எனும் ஆட்சியாளர் கிமு 1820ல் மாரி இராச்சியத்தில் ஆட்சி அமைத்தார். [note 1][29]
மாரி இராச்சிய தேவதை, கிமு 18ம் நூற்றாண்டு
பின்னர் ஆட்சிக்கு வந்த யாதுன் - லிம் மாரி நகரத்தைச் சுற்றிலும் சுவர் எழுப்பினார். மேலும் புதிய கோட்டைகள் நிறுவினார்.[30] மேற்கில் மத்தியதரைக் கடல் வரை மாரி இராச்சியத்தின் ஆட்சியை விரிவு படுத்தினார். [31][32]
அசிரிய மன்னர் முதலாம் சாம்சி-அதாத் கிமு 1798ல் மாரி இராச்சியத்தை கைப்பற்றினார்.[33][34][35]
அசிரியப் பேரரசர், மாரி இராச்சியத்தின் மன்னராக தனது மகன் யாஸ்மா - அதாத்தை நியமித்தார். மாரி இராச்சித்தின் பழைய மன்னர் யாதுன் - லிம்மின் மகளை அசிரியப் பேரரசர் மணந்தார்.[36][37]
மன்னர் சிம்ரி - லிம்மின் முடிசூட்டு விழா, கிமு 18ம் நூற்றாண்டுமாரி இராச்சிய ஆளுநர் சமாஸ் - ரிசா - உசூர், கிமு 760
பாபிலோனை அழிக்க நினைத்த மாரி இராச்சியத்தை, பாபிலோனிய மன்னர் அம்முராபி கிமு 1759ல் அழித்தார். [38] இருப்பினும் மாரி இராச்சியம் ஒரு கிராமாக, பாபிலோனியாவின் ஆட்சியின் கீழ் இருந்தது. [38]
பின்னர் மாரி இராச்சியம் அசிரிய மன்னர் துகுல்தி - நினுர்தா ஆட்சியில் (கிமு 1243 - 1207) இருந்தது.
[39] பின்னர் மாரி இராச்சியம் பாபிலோனியர்கள் மற்றும் அசிரியர்களின் கைகளுக்கு மாறியது.[39]
மாரி இராச்சிய ஆட்சியாளர்கள்
மன்னர் இட்டின் - எல் தலையற்ற சிற்பம், கிமு 2090மாரி இராச்சிய மன்னர் புசூர் -இஷ்தரின் சிற்பம், (கிமு 2050)அக்காடிய பேரரசின் மாரி ஆளுநர் துரா தகானின் தலையற்ற சிற்பம் (கிமு 2071 -2051)மாரி நகர அக்காடிய ஆளுநர் யாதுன் - லிம் கல்வெட்டுக்கள், ஆண்டு கிமு 1820–1798
மாரி நகர இராச்சியத்தை கிமு 2500 முதல் கிமு 1761 முடிய ஆண்ட பல்வேறு வம்ச மன்னர்களின் பட்டியல்:
மாரி இராச்சியத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் இராச்சிய ஆட்சியில் தெற்கு சுமேரியா நாகரீகத்தின் தாக்கம் அதிகம் இருந்தது.[70]. மாரி இராச்சியம் ஒரு நகர இராச்சியமாக விளங்கியது.[71] மாரி நகர மக்களின் முடி அழகு மற்றும் உடைகளால் நன்கு அறியப்படுகிறார்கள். [72][73] மாரி இராச்சியத்தினர் 12 மாதங்கள் கொண்ட சூரிய நாட்காட்டி அறிமுகப்படுத்தினர். இதனையே எப்லா இராச்சித்தினரும் கடைபிடித்தனர். [74][75] மாரி இராச்சியத்தினர் தங்களது குறிப்புகள் சுமேரிய மொழியில் எழுதியுனர். கலை மற்றும் கட்டிடங்களும் சுமேரிய பாணியில் அமைத்தனர்.[76]
மாரி இராச்சியத்தில் பெண்கள், ஆண்களுக்கு நிகராக உரிமைகளை அனுபவித்தனர்.[79] மன்னர் வெளிநாட்டிற்கு சென்றிருந்த போது, மாரி இராச்சிய ராணி சிப்தி, தன் கணவரின் பெயரால் நாடாண்டார். [80]
சுமேரிய மற்றும் செமிடிக் மக்களின் பல்தெய்வ வழிபாட்டை மாரி மக்களும் கொண்டிருந்தனர்.[81][82] இருப்பினும் மெர் எனும் காவல்தெய்வத்தை முதன்மைக் கடவுளாக வணங்கினர்.[1] வீட்டின் செழிப்பிற்கு பெண் தெய்வமாக இஷ்தர் மற்றும் ஆதாத் கடவள்களை வணங்கினர்,[81] அத்தர் [83] மற்றும் அனைத்தும் அறிந்த, அனைத்தும் பார்கின்ற உது (சமாஸ்) எனும் சூரியக் கடவுளை வணங்கினர். [84][85][81][86] மேலும் என்கி, அனு மற்றும் என்லில் போன்ற தெய்வஙகளை வணங்கினர்.[87] மாரி இராச்சிய மக்கள் கோயில் பூசாரிகளிடம் அருள்வாக்கு கேட்கும் வழக்கம் கொண்டிருந்தனர்.[88] சமயச் சடங்களில் மன்னர்களும், அரச குடும்பத்தினரும் பங்கு கொண்டனர்.[89]
அகழாய்வுகளும், ஆவணக் காப்பகங்களும்
மாரி தொல்லியல் களத்தின் அரண்மனைச் சுவர்களின் பகுதிகள்
தற்கால சிரியா - ஈராக் நாடுகளின் பகுதிகளைக் கொண்ட பண்டைய மாரி நகரத்தில் 1933ம் ஆண்டில் அகழாய்வு செய்யப்பட்டது.
[90] இப்பகுதியில் ஒரு பழங்குடி மனிதன், மேட்டை தோண்டிய போது, தலையற்ற சிற்பம் கண்டெடுத்தார்.[90] இச்செய்தி அறிந்த பிரான்சு நாட்டு தொல்லியல் அறிஞர்கள், 14 டிசம்பர் 1933 அன்று மாரி நகரத்தில் தங்கி, அகழாய்வு பணிகள் மேற்கொண்டனர். அகழாய்வின் போது பண்டைய இஷ்தர் கோயிலின் சிதிலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதனை அடுத்து அப்பகுதியை முழுமையாக அகழாய்வுகள் மேற்கொண்டனர்.
மாரி நகர தொல்லியல் களத்தில் கிபி 1993ல் அகழாய்வு செய்கையில் 300 அறைகளுடன் கூடிய சிம்ரிலிம் எனும் மன்னரின் பெரிய அரண்மனை கண்டெடுக்கப்பட்டது. இவ்வரண்மனையை பாபிலோன் மன்னர் அம்முராபி கிமு 18ம் நூற்றாண்டில் கைப்பற்றி அழித்தார்.
1933 - 1939, 1951-1956 மற்றும் 1960 ஆண்டுகளில் மாரி நகரத்தின் தொல்லியல் அகழாய்வுகள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டது [95] முதலில் ஆண்ட்ரே பாரேட் 1974 முடிய 21 முறை அகழாய்வுகள் மேற்கொண்டார். [96] பின்னர் ஜீன் கிளௌட் மர்குரேன் (1979_2004)[97] மற்றும் பஸ்கல் பட்டலின் 2005ல் மீண்டும் அகழாய்வுகள் மேற்கொண்டார்.[95] மாரி தொல்லியல் களம் தொடர்பான இதழ் 1982 முதல் வெளியிடப்பட்டது. [98][99]
மாரி நகர களிமண் பலகைகள்
மாரி இராச்சியத்தில் களிமண் பலகைகளில்அக்காதிய மொழியில் [100] எழுதப்பட்ட குறிப்புகள் மூலம் மாரி இராச்சிய வரலாறு, மக்களின் பண்பாடு, நாகரீகம் பழக்க வழக்கங்கள் அறிந்து கொள்ள முடிகிறது.[101] இந்நகரத்தின் தொல்லியல் களத்தில் கண்டெடுத்த 3,000 களிமண் பலகை கடிதங்கள் மூலம் மாரி நாட்டின் நிர்வாகம், நீதித் துறை, பொருளாதாரம் குறித்தான செய்திகள் அறிய முடிகிறது. [102] மாரி நகர தொல்லியல் களத்தில் கிடைத்த செங்கற் பலகை ஆவனங்கள் கிமு 1800 - 1750 காலத்தவையாகும்.[102]
மாரி தொல்லியல் களத்தின் தற்போதைய நிலை
2011ம் ஆண்டில் துவங்கிய சிரிய உள்நாட்டுப் போரின் விளைவாக, பண்டைய மாரி நகர தொல்லியல் களத்தில் இருந்த அரச குடும்பத்தினரின் அரண்மனைகள், பொதுக்குளியல் அறைகள், இஷ்தர் மற்றும் தகான் கோயில்களை இசுலாமிய அரசு பயங்கரவாதிகளால் வெடி குண்டுகள் வைத்து தரைமட்டமாக்கப்பட்டது.[103]
Archi, Alfonso; Biga, Maria Giovanna (2003). "A Victory over Mari and the Fall of Ebla". Journal of Cuneiform Studies (The American Schools of Oriental Research) 55. பன்னாட்டுத் தர தொடர் எண்:2325-6737.
Armstrong, James A. (1996). "Sumer and Akkad". In Fagan, Brian M. (ed.). The Oxford Companion to Archaeology. Oxford University Press. ISBN978-0-19-507618-9. {{cite book}}: Invalid |ref=harv (help)
Aruz, Joan; Wallenfels, Ronald, eds. (2003). Art of the First Cities: The Third Millennium B.C. from the Mediterranean to the Indus. Metropolitan Museum of Art. ISBN978-1-58839-043-1. {{cite book}}: Invalid |ref=harv (help)
Astour, Michael C. (2002). "A Reconstruction of the History of Ebla (Part 2)". In Gordon, Cyrus Herzl; Rendsburg, Gary (eds.). Eblaitica: Essays on the Ebla Archives and Eblaite Language. Vol. 4. Eisenbrauns. ISBN978-1-57506-060-6. {{cite book}}: Invalid |ref=harv (help)
Aubet, Maria Eugenia (2013). Commerce and Colonization in the Ancient Near East. Translated by Turton, Mary. Cambridge University Press. ISBN978-0-521-51417-0. {{cite book}}: Invalid |ref=harv (help)
Bonatz, Dominik; Kühne, Hartmut; Mahmoud, Asʻad (1998). Rivers and Steppes: Cultural Heritage and Environment of the Syrian Jezireh: Catalogue to the Museum of Deir ez-Zor. Damascus: Ministry of Culture, Directorate-General of Antiquities and Museums. கணினி நூலகம்41317024. {{cite book}}: Invalid |ref=harv (help)
Bretschneider, Joachim; Van Vyve, Anne-Sophie; Leuven, Greta Jans (2009). "War of the lords, The Battle of Chronology: Trying to Recognize Historical Iconography in the 3rd Millennium Glyptic Art in seals of Ishqi-Mari and from Beydar". Ugarit-Forschungen (Ugarit-Verlag) 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-86835-042-5.
Charpin, Dominique (2011). "Patron and Client: Zimri-Lim and Asqudum the Diviner". In Radner, Karen; Robson, Eleanor (eds.). The Oxford Handbook of Cuneiform Culture. Oxford University Press. ISBN978-0-19-955730-1. {{cite book}}: Invalid |ref=harv (help)
Chavalas, Mark (2005). "The Age of Empires, 3100–900 BCE". In Snell, Daniel C. (ed.). A Companion to the Ancient Near East. Blackwell Publishing. ISBN978-1-4051-3739-3. {{cite book}}: Invalid |ref=harv (help)
Chew, Sing C. (2007). The Recurring Dark Ages: Ecological Stress, Climate Changes, and System Transformation. Trilogy on world ecological degradation. Vol. 2. Altamira Press. ISBN978-0-7591-0452-5. {{cite book}}: Invalid |ref=harv (help)
Cohen, Mark E. (1993). The Cultic Calendars of the Ancient Near East. CDL Press: The University Press of Maryland. ISBN978-1-883053-00-0. {{cite book}}: Invalid |ref=harv (help)
Cohen, Yoram (2013). George, Andrew R. (ed.). Wisdom from the Late Bronze Age. Writings from the Ancient World. Vol. 34. Society of Biblical Literature. Atlanta. ISBN978-1-58983-754-6. {{cite book}}: Invalid |ref=harv (help)
Cooper, Jerrold S. (1986). Presargonic Inscriptions. Sumerian and Akkadian Royal Inscriptions. Vol. 1. American Oriental Society. ISBN978-0-940490-82-6. {{cite book}}: Invalid |ref=harv (help)
Cooper, Jerrold S (1999). "Sumerian and Semitic Writing in Most Ancient Syro-Mesopotamia". In van Lerberghe, Karel; Voet, Gabriela (eds.). Languages and Cultures in Contact: At the Crossroads of Civilizations in the Syro-Mesopotamian realm. Proceedings of the 42th RAI. Orientalia Lovaniensia Analecta. Vol. 92. Peeters Publishers & Department of Oriental Studies, Leuven. ISBN978-90-429-0719-5. {{cite book}}: Invalid |ref=harv (help)
Dalley, Stephanie (2002) [1984]. Mari and Karana, Two Old Babylonian Cities (2 ed.). Gorgias Press. ISBN978-1-931956-02-4. {{cite book}}: Invalid |ref=harv (help)
Daniels, Brian I.; Hanson, Katryn (2015). "Archaeological Site Looting in Syria and Iraq: A Review of the Evidence". In Desmarais, France (ed.). Countering Illicit Traffic in Cultural Goods: The Global Challenge of Protecting the World's Heritage. The International Council of Museums. ISBN978-92-9012-415-3. {{cite book}}: Invalid |ref=harv (help)
DeVries, LaMoine F. (2006). Cities of the Biblical World: An Introduction to the Archaeology, Geography, and History of Biblical Sites. Wipf and Stock Publishers. ISBN978-1-55635-120-4. {{cite book}}: Invalid |ref=harv (help)
Dolce, Rita (2008). "Ebla before the Achievement of Palace G Culture: An Evaluation of the Early Syrian Archaic Period". In Kühne, Hartmut; Czichon, Rainer Maria; Kreppner, Florian Janoscha (eds.). Proceedings of the 4th International Congress of the Archaeology of the Ancient Near East, 29 March - 3 April 2004, Freie Universität Berlin. Vol. 2. Otto Harrassowitz Verlag. ISBN978-3-447-05757-8. {{cite book}}: Invalid |ref=harv (help)
Evans, Jean M. (2012). The Lives of Sumerian Sculpture: An Archaeology of the Early Dynastic Temple. Cambridge University Press. ISBN978-1-139-78942-4. {{cite book}}: Invalid |ref=harv (help)
Feliu, Lluís (2003). The God Dagan in Bronze Age Syria. Translated by Watson, Wilfred GE. Brill. ISBN978-90-04-13158-3. {{cite book}}: Invalid |ref=harv (help)
Finer, Samuel Edward (1997). Ancient monarchies and empires. The History of Government from the Earliest Times. Vol. 1. Oxford University Press. ISBN978-0-19-820664-4. {{cite book}}: Invalid |ref=harv (help)
Fleming, Daniel E. (2004). "Prophets and Temple Personnel in the Mari Archives". In Grabbe, Lester L.; Bellis, Alice Ogden (eds.). The Priests in the Prophets: The Portrayal of Priests, Prophets, and Other Religious Specialists in the Latter Prophets. T&T Clark International. ISBN978-0-567-40187-8. {{cite book}}: Invalid |ref=harv (help)
Fleming, Daniel E. (2012). The Legacy of Israel in Judah's Bible: History, Politics, and the Reinscribing of Tradition. Cambridge University Press. ISBN978-1-139-53687-5. {{cite book}}: Invalid |ref=harv (help)
Frayne, Douglas (1990). Old Babylonian Period (2003–1595 BC). The Royal Inscriptions of Mesopotamia Early Periods. Vol. 4. University of Toronto Press. ISBN978-0-8020-5873-7. {{cite book}}: Invalid |ref=harv (help)
Frayne, Douglas (2001). "In Abraham's Footsteps". In Daviau, Paulette Maria Michèle; Wevers, John W.; Weigl, Michael (eds.). The World of the Aramaeans. Vol. 1: Biblical Studies in Honour of Paul-Eugène Dion. Sheffield Academic Press. ISBN978-0-567-20049-5. {{cite book}}: Invalid |ref=harv (help)
Frayne, Douglas (2008). Pre-Sargonic Period: Early Periods (2700–2350 BC). The Royal inscriptions of Mesopotamia Early Periods. Vol. 1. University of Toronto Press. ISBN978-1-4426-9047-9. {{cite book}}: Invalid |ref=harv (help)
Gadd, Cyril John (1971). "The Cities of Babylonia". In Edwards, Iorwerth Eiddon Stephen; Gadd, Cyril John; Hammond, Nicholas Geoffrey Lemprière (eds.). Part 2: Early History of the Middle East. The Cambridge Ancient History (Second Revised Series). Vol. 1 (3 ed.). Cambridge University Press. ISBN978-0-521-07791-0. {{cite book}}: Invalid |ref=harv (help)
Grabbe, Lester L. (2004). "Introduction and Overview". In Grabbe, Lester L.; Bellis, Alice Ogden (eds.). The Priests in the Prophets: The Portrayal of Priests, Prophets, and Other Religious Specialists in the Latter Prophets. T&T Clark International. ISBN978-0-567-40187-8. {{cite book}}: Invalid |ref=harv (help)
Grayson, Albert Kirk (1972). Assyrian Royal Inscriptions. Records of the Ancient Near East. Vol. 1: From the Beginning to Ashur-Resha-Ishi I. Otto Harrassowitz Verlag. ISBN978-3-447-01382-6. ISSN0340-8450. {{cite book}}: Invalid |ref=harv (help)
Green, Alberto Ravinell Whitney (2003). The Storm-god in the Ancient Near East. Biblical and Judaic studies from the University of California, San Diego. Vol. 8. Eisenbrauns. ISBN978-1-57506-069-9. {{cite book}}: Invalid |ref=harv (help)
Haldar, Alfred (1971). Who Were the Amorites?. Monographs on the ancient Near East. Vol. 1. Brill. கணினி நூலகம்2656977. {{cite book}}: Invalid |ref=harv (help)
Hamblin, William J. (2006). Warfare in the Ancient Near East to 1600 BC. Routledge. ISBN978-1-134-52062-6. {{cite book}}: Invalid |ref=harv (help)
Harris, Rivkah (2003) [2000]. Gender and Aging in Mesopotamia: The Gilgamesh Epic and Other Ancient Literature. University of Oklahoma Press. ISBN978-0-8061-3539-7. {{cite book}}: Invalid |ref=harv (help)
Hasselbach, Rebecca (2005). Sargonic Akkadian: A Historical and Comparative Study of the Syllabic Texts. Otto Harrassowitz Verlag. ISBN978-3-447-05172-9. {{cite book}}: Invalid |ref=harv (help)
Heimpel, Wolfgang (2003). Letters to the King of Mari: A New Translation, with Historical Introduction, Notes, and Commentary. Mesopotamian civilizations. Vol. 12. Eisenbrauns. ISBN978-1-57506-080-4. ISSN1059-7867. {{cite book}}: Invalid |ref=harv (help)
Heintz, Jean Georges; Bodi, Daniel; Millot, Lison (1990). Bibliographie de Mari: Archéologie et Textes (1933–1988). Travaux du Groupe de Recherches et d'Études Sémitiques Anciennes (G.R.E.S.A.), Université des Sciences Humaines de Strasbourg (in பிரெஞ்சு). Vol. 3. Otto Harrassowitz Verlag. ISBN978-3-447-03009-0. {{cite book}}: Invalid |ref=harv (help)
Kramer, Samuel Noah (2010) [1963]. The Sumerians: Their History, Culture, and Character. University of Chicago Press. ISBN978-0-226-45232-6. {{cite book}}: Invalid |ref=harv (help)
Kupper, Jean Robert (1973). "Northern Mesopotamia and Syria". In Edwards, Iorwerth Eiddon Stephen; Gadd, Cyril John; Hammond, Nicholas Geoffrey Lemprière; Sollberger, Edmond (eds.). Part 1: The Middle East and the Aegean Region, c.1800–1380 BC. The Cambridge Ancient History (Second Revised Series). Vol. 2 (3 ed.). Cambridge University Press. ISBN978-1-139-05426-3. {{cite book}}: Invalid |ref=harv (help)
Larsen, Mogens Trolle (2008). "The Middle Bronze Age". In Aruz, Joan; Benzel, Kim; Evans, Jean M. (eds.). Beyond Babylon: Art, Trade, and Diplomacy in the Second Millennium B.C. Metropolitan Museum of Art. ISBN978-1-58839-295-4. {{cite book}}: Invalid |ref=harv (help)
Liverani, Mario (2013). The Ancient Near East: History, Society and Economy. Routledge. ISBN978-1-134-75084-9. {{cite book}}: Invalid |ref=harv (help)
Maisels, Charles Keith (2005) [1990]. The Emergence of Civilisation: From Hunting and Gathering to Agriculture, Cities and the State of the Near East. Routledge. ISBN978-1-134-86328-0. {{cite book}}: Invalid |ref=harv (help)
Malamat, Abraham (1980). "A Mari Prophecy and Nathan's Dynastic Oracle". In Emerton, John Adney (ed.). Prophecy: Essays presented to Georg Fohrer on his Sixty-Fifth Birthday. Beihefte zur Zeitschrift für die Alttestamentliche Wissenschaft. Vol. 150. Walter de Gruyter. ISBN978-3-11-083741-4. {{cite book}}: Invalid |ref=harv (help)
Malamat, Abraham (1998). Mari and the Bible. Studies in the History and Culture of the Ancient Near East. Vol. 12. Brill. ISBN978-90-04-10863-9. ISSN0169-9024. {{cite book}}: Invalid |ref=harv (help)
Margueron, Jean-Claude (2003). "Mari and the Syro-Mesopotamian World". In Aruz, Joan; Wallenfels, Ronald (eds.). Art of the First Cities: The Third Millennium B.C. from the Mediterranean to the Indus. Metropolitan Museum of Art. ISBN978-1-58839-043-1. {{cite book}}: Invalid |ref=harv (help)
Margueron, Jean-Claude (2013). "The Kingdom of Mari". In Crawford, Harriet (ed.). The Sumerian World. Translated by Crawford, Harriet. Routledge. ISBN978-1-136-21912-2. {{cite book}}: Invalid |ref=harv (help)
Matthiae, Paolo (2003). "Ebla and the Early Urbanization of Syria". In Aruz, Joan; Wallenfels, Ronald (eds.). Art of the First Cities: The Third Millennium B.C. from the Mediterranean to the Indus. Metropolitan Museum of Art. ISBN978-1-58839-043-1. {{cite book}}: Invalid |ref=harv (help)
McMahon, Augusta (2013). "North Mesopotamia in the Third Millennium BC". In Crawford, Harriet (ed.). The Sumerian World. Routledge. ISBN978-1-136-21912-2. {{cite book}}: Invalid |ref=harv (help)
Michalowski, Piotr (1993). "Memory and Deed: The Historiography of the Political Expansion of the Akkad State". In Liverani, Mario (ed.). Akkad: the First World Empire: Structure, Ideology, Traditions. History of the Ancient Near East Studies. Vol. 5. Padua: S.a.r.g.o.n. Editrice Libreria. கணினி நூலகம்32011634. {{cite book}}: Invalid |ref=harv (help)
Michalowski, Piotr (1995). Van Lerberghe, Karel; Schoors, Antoon (eds.). Immigration and Emigration Within the Ancient Near East: Festschrift E. Lipiński. Orientalia Lovaniensia Analecta. Vol. 65. Peeters Publishers & Department of Oriental Studies, Leuven. ISBN978-90-6831-727-5. ISSN0777-978X. {{cite book}}: Invalid |ref=harv (help)
Michalowski, Piotr (2000). "Amorites". In Freedman, David Noel; Myers, Allen C. (eds.). Eerdmans Dictionary of the Bible. Eerdmans Publishing. ISBN978-90-5356-503-2. {{cite book}}: Invalid |ref=harv (help)
Michalowski, Piotr (2003). "The Earliest Scholastic Tradition". In Aruz, Joan; Wallenfels, Ronald (eds.). Art of the First Cities: The Third Millennium B.C. from the Mediterranean to the Indus. Metropolitan Museum of Art. ISBN978-1-58839-043-1. {{cite book}}: Invalid |ref=harv (help)
Nadali, Davide (2007). "Monuments of War, War of Monuments: Some Considerations on Commemorating War in the Third Millennium BC". Orientalia (Pontificium Institutum Biblicum) 76 (4). இணையக் கணினி நூலக மையம்:557711946.
Nissinen, Martti; Seow, Choon Leong; Ritner, Robert Kriech (2003). Machinist, Peter (ed.). Prophets and Prophecy in the Ancient Near East. Writings from the Ancient World. Vol. 12. Society of Biblical Literature. Atlanta. ISBN978-1-58983-027-1. {{cite book}}: Invalid |ref=harv (help)
Ochterbeek, Cynthia (1996). "Dan". In Berney, Kathryn Ann; Ring, Trudy; Watson, Noelle; Hudson, Christopher; La Boda, Sharon (eds.). Middle East and Africa. Vol. 4: International Dictionary of Historic Places. Routledge. ISBN978-1-134-25993-9. {{cite book}}: Invalid |ref=harv (help)
Oldenburg, Ulf (1969). The Conflict between El and Ba'al in Canaanite Religion. Dissertationes ad Historiam Religionum Pertinentes. Vol. 3. Brill. ISSN0419-4233. கணினி நூலகம்63449. {{cite book}}: Invalid |ref=harv (help)
Otto, Adelheid; Biga, Maria Giovanna (2010). "Thoughts About the Identification of Tall Bazi with Armi of the Ebla Texts". In Matthiae, Paolo; Pinnock, Frances; Nigro, Lorenzo; Marchetti, Nicolò; Romano, Licia (eds.). Proceedings of the 6th International Congress of the Archaeology of the Ancient Near East: Near Eastern archaeology in the past, present and future: heritage and identity, ethnoarchaeological and interdisciplinary approach, results and perspectives; visual expression and craft production in the definition of social relations and status. Vol. 1. Otto Harrassowitz Verlag. ISBN978-3-447-06175-9. {{cite book}}: Invalid |ref=harv (help)
Pardee, Dennis; Glass, Jonathan T. (1984). "Literary Sources for the History of Palestine and Syria: The Mari Archives". The Biblical Archaeologist (The American Schools of Oriental Research) 47 (2). பன்னாட்டுத் தர தொடர் எண்:2325-534X.
Pitard, Wayne T. (2001) [1998]. "Before Israel: Syria-Palestine in the Bronze Age". In Coogan, Michael David (ed.). The Oxford History of the Biblical World (revised ed.). Oxford University Press. ISBN978-0-19-513937-2. {{cite book}}: Invalid |ref=harv (help)
Podany, Amanda H. (2010). Brotherhood of Kings: How International Relations Shaped the Ancient Near East. Oxford University Press. ISBN978-0-19-979875-9. {{cite book}}: Invalid |ref=harv (help)
Porter, Anne (2012). Mobile Pastoralism and the Formation of Near Eastern Civilizations: Weaving Together Society. Cambridge University Press. ISBN978-0-521-76443-8. {{cite book}}: Invalid |ref=harv (help)
Riehl, Simone; Pustovoytov, Konstantin; Dornauer, Aron; Sallaberger, Walther (2013). "Mid-to-Late Holocene Agricultural System Transformations in the Northern Fertile Crescent: A Review of the Archaeobotanical, Geoarchaeological, and Philological Evidence". In Giosan, Liviu; Fuller, Dorian Q.; Nicoll, Kathleen; Flad, Rowan K.; Clift, Peter D. (eds.). Climates, Landscapes, and Civilizations. Geophysical Monograph Series. Vol. 198. American Geophysical Union. ISBN978-0-87590-488-7. ISSN0065-8448. {{cite book}}: Invalid |ref=harv (help)
Shaw, Ian (1999). "Mari". In Shaw, Ian; Jameson, Robert (eds.). A Dictionary of Archaeology. John Wiley & Sons. ISBN978-0-470-75196-1. {{cite book}}: Invalid |ref=harv (help)
Stieglitz, Robert R. (2002). "The Deified Kings of Ebla". In Gordon, Cyrus Herzl; Rendsburg, Gary (eds.). Eblaitica: Essays on the Ebla Archives and Eblaite Language. Vol. 4. Eisenbrauns. ISBN978-1-57506-060-6. {{cite book}}: Invalid |ref=harv (help)
Strommenger, Eva (1964) [1962]. 5000 Years of the Art of Mesopotamia. Translated by Haglund, Christina. Harry N. Abrams. கணினி நூலகம்505796. {{cite book}}: Invalid |ref=harv (help)
Suriano, Matthew J. (2010). The Politics of Dead Kings: Dynastic Ancestors in the Book of Kings and Ancient Israel. Vol. 48. Mohr Siebeck. ISBN978-3-16-150473-0. ISSN1611-4914. {{cite book}}: |journal= ignored (help); Invalid |ref=harv (help)
Teissier, Beatrice (1996) [1995]. Egyptian Iconography on Syro-Palestinian Cylinder Seals of the Middle Bronze Age. Orbis Biblicus et Orientalis- Series Archaeologica. Vol. 11. University Press Fribourg Switzerland. ISBN978-3-525-53892-0. ISSN1422-4399. {{cite book}}: Invalid |ref=harv (help)
Tetlow, Elisabeth Meier (2004). Women, Crime and Punishment in Ancient Law and Society. Vol. 1: The Ancient Near East. Continuum. ISBN978-0-8264-1628-5. {{cite book}}: Invalid |ref=harv (help)
Van De Mieroop, Marc (2002). "Foreign Contacts and the Rise of an Elite in Early Dynastic Babylonia". In Ehrenberg, Erica (ed.). Leaving No Stones Unturned: Essays on the Ancient Near East and Egypt in Honor of Donald P. Hansen. Eisenbrauns. ISBN978-1-57506-055-2. {{cite book}}: Invalid |ref=harv (help)
Van De Mieroop, Marc (2007) [2005]. King Hammurabi of Babylon: A Biography. Blackwell Ancient Lives. Vol. 19. Blackwell Publishing. ISBN978-0-470-69534-0. {{cite book}}: Invalid |ref=harv (help)
Van De Mieroop, Marc (2011) [2003]. A History of the Ancient Near East ca. 3000 - 323 BC. Blackwell History of the Ancient World. Vol. 6 (2 ed.). Wiley-Blackwell. ISBN978-1-4443-2709-0. {{cite book}}: Invalid |ref=harv (help)
Van Der Meer, Petrus (1955) [1947]. The Chronology of Ancient Western Asia and Egypt. Documenta et Monumenta Orientis Antiqui. Vol. 2 (2 ed.). Brill. கணினி நூலகம்4727997. {{cite book}}: Invalid |ref=harv (help)
Van Der Toorn, Karel (1996). Family Religion in Babylonia, Ugarit and Israel: Continuity and Changes in the Forms of Religious Life. Studies in the History of the Ancient Near East. Vol. 7. Brill. ISBN978-90-04-10410-5. ISSN0169-9024. {{cite book}}: Invalid |ref=harv (help)
Viollet, Pierre-Louis (2007) [2005]. Water Engineering in Ancient Civilizations: 5,000 Years of History. IAHR Monographs. Vol. 7. Translated by Holly, Forrest M. CRC Press. ISBN978-90-78046-05-9. {{cite book}}: Invalid |ref=harv (help)
Walton, John H. (1990) [1989]. Ancient Israelite Literature in Its Cultural Context: A Survey of Parallels Between Biblical and Ancient Near Eastern Texts. Zondervan Publishing House. ISBN978-0-310-36591-4. {{cite book}}: Invalid |ref=harv (help)
Wossink, Arne (2009). Challenging Climate Change: Competition and Cooperation Among Pastoralists and Agriculturalists in Northern Mesopotamia (c. 3000–1600 BC). Sidestone Press. ISBN978-90-8890-031-0. {{cite book}}: Invalid |ref=harv (help)