செம்தேத் நசிர்
![]() ![]() செம்த்தேத் நசிர் (Jemdet Nasr) (அரபி: جمدة نصر) பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவில் செம்தேத் நசிர் காலத்திய (கிமு 3100–2900), பண்டைய சுமேரிய பண்பாட்டை எடுத்துக் கூறும் ஒரு தொல்லியல் மேடும், சுமேரிய நகரமும் ஆகும். இது தற்கால ஈராக்கின் பாபில் ஆளுநகரத்தில் உள்ளது. இது கிஷ் நகரததிற்கு தென்கிழக்கே 26 கி.மீ. தொலைவில் உள்ளது. தொல்லியல் ஆய்வாளர்கள்செம்தேத் நசிர் தொல்லியல் மேட்டை 1926-இல் ஸ்டீபன் ஹெர்பர்ட் லாங்டன் ஆய்வு செய்தபோது களிமண் செங்கற் கட்டிடத்தில் ஆப்பெழுத்து கொண்ட களிமண் பலகைகளை கண்டெடுத்தார். இத்தொல்லியல் மேடு சுமேரிய அரசு நிர்வாகத்தின் மையமாக இருந்ததை அறிந்தார்.[1] 1928-இல் இத்தொல்லியல் மேட்டை மீண்டும் அகழ்வாய்வு செய்தனர். 1980-இல் பிரித்தானிய தொல்லியலாளர் ரோஜர் மாத்தியூஸ் இத்தொல்லியல் மேட்டை மீண்டும் அகழ்வாய்வு செய்ததில் இப்பகுதி உபைதுகள் காலம், உரூக் காலம், முதல் துவக்க வம்ச காலத்தியது எனக்கண்டறிந்தார். ஆய்வின் வரலாறு1926-இல் கிஷ் தொல்லியல் மேட்டை அகழ்வாய்வு செய்த போது கிடைத்த களிமண் பலகைகள் மற்றும் ஓவியம் தீட்டப்பட்ட பீங்கான் பாண்டங்கள், கிஷ் நகரத்திற்கு தென்கிழக்கே 26 கி.மீ. தொலைவில் உள்ள செம்தேத் நசிர் தொல்லியல் மேட்டின் தொல்பொருள்கள் போன்று இருப்பதை அறிந்தனர்.[2] எனவே செம்தேத் நசிர் தொல்லியல் களத்தை மீண்டும் அகழாய்வு செய்யதனர்.[3] செம்தேத் நசிர் தொல்லியல் மேட்டில் பெரிய அளவிலான களிமண் செங்கற்களால் கட்டப்பட்ட கட்டிட அமைப்புகளும், சுமேரியாவின் துவக்க கால ஆப்பெழுத்துக்களில் எழுதப்பட்ட பல களிமண் பலகைகள் அகழாய்வில் கண்டெடுத்தனர்.[3] இத்தொல்பொருள்களை பாக்தாத் அருங்காட்சியகம், ஆக்ஸ்போர்டு அருங்காட்சியகம் மற்றும் சிக்காக்கோ அருங்காட்சியக ங்களுக்கு ஆய்வுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.[4] 1928-இல் மீண்டும் இத்தொல்லியல் களாத்தை எல்.சிஎச். வாட்டேலின் என்பவர் 120 பணியாளர்களுடன் அகழாய்வு செய்தார்.[3] அவரது அகழாய்வில் ஏதும் கிடைக்கவில்லை. பின்னர் மீண்டும் 1988 மற்றும் 1989 ஆண்டுகளில் இத்தொல்லியல் களத்தை பிரித்தானிய தொல்லியல் அறிஞர் ரோஜர் மாத்தியூஸ் தலைமையில் அகழாய்வு செய்யப்பட்டது.[5] உரூக் காலத்திற்கும் மெசொப்பொத்தேமியாவின் துவக்க வம்சங்களின் காலம்த்திற்கும் இடையே விளங்கிய செம்தேத் நசிர் காலத்தை தொல்லியல் அறிஞர்கள் 1930-இல் மெசொப்பொத்தேமியாவின் வரலாற்றில் இணைத்தனர். செம்தேத் நசிர் தொல்லியல் களத்தில் கீழ் மெசொப்பொத்தேமியாவில் இருந்த சமகாலத்திய தொல்லியல் களங்கள் அபு சலாபிக், சுருப்பக், நிப்பூர், ஊர் மற்றும் உரூக் ஆகும்.[6] செம்தேத் தொல்லியல் மேட்டின் காலம் கிமு 3100 - கிமு 2900 காலத்தியது என கணித்துள்ளனர்.[7] செம்தேத் நசிர் தொல்லியல் மேட்டின் அமைப்புசெம்தேத் நசிர் தொல்லியல் மேடு இரண்டு தொகுதிகளைக் கொண்டது. அதில் முதல் தொல்லியல் மேடு 160 மீட்டர் நீளம், 140 மீட்டர் அகலம், 2.9 மீட்டர் உயரத்துடன் கூடியது. மொத்தப்பரப்பளவு 1.5 ஹெக்டேர் ஆகும். இரண்டாம் தொல்லியல் களம் 350 மீட்டர் நீளம், 300 அகலம், 3.5 மீ உயரத்துடன், 7.5 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது.[8]
செம்தேத் நசிர் தொல்லியம் மேட்டில் கண்டெடுக்கப்பட்ட துவக்க கால சுமேரிய ஆப்பெழுத்து களிமண் பலகைகளாலும், சுவஸ்திக்கா சின்னம், பறவைகள், மரங்கள், பாம்பு, தேள், ஆடு, மீன்கள், சிங்கம் போன்ற உருவங்களுடன் வண்ணம் தீட்டப்பட்ட, அழகிய பீங்கான் பெரிய ஜாடிகள், கிண்ணங்கள், குடுவைகள் போன்ற பாத்திரங்களாலும் புகழ் பெற்றது. இக்காலத்தில் நகரத்தின் மையத்தில் நிறுவப்பட்டிருந்த களிமண் செங்கற்களால் கட்டப்பட்ட பெரிய கட்டிட அமைப்புகளுக்கும் பெயர் பெற்றது.[9] மேலும் இத்தொல்லியல் மேட்டில் கண்டெடுத்த களிமண் பலகையில் அச்சடித்த உருளை வடிவ முத்திரைகள் மற்றும் வில்லை முத்திரைகள் புகழ்பெற்றவையாகும்.[10] உரூக் காலத்தின் தொடர்ச்சியே இக்களிமண் உருளைவடிவ முத்திரைகள். இவ்வுருளை வடிவ முத்திரைகளில் மனித உருவங்கள், விலங்குகள் உருவம், கட்டிடங்களின் அமைப்புகள் பதியப்பட்டுள்ளது. ஒரு களிமண் பலகை முத்திரையில் செம்தேத் நகரத்தைச் சுற்றியிருந்த லார்சா, நிப்பூர், ஊர், உரூக் போன்ற சுமேரிய நகரங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தது.[11] இத்தொல்லியல் களத்தில் சிறிதளவு செப்புப் பொருட்களே கிடைத்துள்ளது. மேலும் மாவு அரைக்கும் கல் அமைப்புகள் கிடைத்துள்ளது. மேலும் களிமண்ணால் செய்த சில பொருட்கள் கிடைத்துள்ளது.[12] இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia