பாபிலோனியாவின் காசிட்டு வம்சம்
கிமு 1531 — 1155 தலைநகரம் துர்-குரிகல்சு பேசப்படும் மொழிகள் காசிட்டு மொழி அரசாங்கம் முடியாட்சி பாபிலோனிய மன்னர் • கிமு 1500
இரண்டாம் அகும் (முதல்) • கிமு 1157—1155
என்லில்- நதின் - அகி (இறுதி)
வரலாற்று சகாப்தம் வெண்கலக் காலம் • தொடக்கம்
கிமு 1531 1531 • காசிட்டு மன்னர் சாபாப - சூமா - இட்டின்
அசிரியா மற்றும்
ஈலம் மீது படையெடுத்தல்
கிமு 1158 • முடிவு
கிமு 1155
தற்போதைய பகுதிகள் ஈரான் ஈராக்
காசிட்டுகளின் இராச்சியம் உள்ளடக்கிய கிமு 1400ல் பண்டைய அண்மை கிழக்கு
தற்கால
ஈராக்கில் காசிட்டுகள் கைப்பற்றிய முக்கிய நகரங்களின் வரைபடம்]](clickable map)
காசிட்டு மக்கள் (Kassites ) (கிமு 1531 — 1155) பண்டைய அண்மை கிழக்கில் , பழைய பாபிலோனியப் பேரரசுக்குப் பின், பாபிலோனியாவை கிமு 1531 முதல் கிமு 1155 முடிய 366 ஆண்டுகள் ஆட்சி செய்தவர்கள்.[ 1]
1595ல் இட்டைட்டு பேரரசினர் பாபிலோனியாவை தாக்கி அழித்த போது, காசிட்டு மக்கள் பாபிலோனியாவைக் கைப்பற்றி துர் - குரிகல்சு நகரத்தில் காசிட்டு வம்சத்தை நிறுவினர்.[ 2] [ 3]
இராணுவ பழங்குடி மக்களான காசிட்டு வம்ச ஆட்சியாளர்கள் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை வழங்கினாலும், உள்ளூரில் செல்வாக்கு பெற இயலவில்லை.[ 4] காசிட்டு வம்சத்தின் 500 ஆண்டு ஆட்சியில் பாபிலோனிய பண்பாட்டை வளர்த்தெடுத்தனர்.[ 3] காசிட்டு மக்களின் போர்க் குதிரைகள் மற்றும் போர் இரதங்கள் போற்றப்படும் முறை முதன்முதலில் பபிலோனியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.[ 4]
வரலாறு
காசிட்டு மக்களின் தாயகம் தற்கால ஈரானின் சக்ரோசு மலைத்தொடர் ஆகும். ஈல மக்கள் , குடியன்களைப் போன்று காசிட்டு மக்களும் மெசொப்பொத்தேமியாவில் தங்களது இராச்சியத்தை நிறுவினர்.[ 5] [ 6]
அம்முராபியின் மகன் ஆட்சியில் கிமு 18ம் நூற்றாண்டில் பாபிலோனியா எதிரிகளால் தாக்கப்படும் போது, காசிட்டு மக்கள் பாபிலோனில் குடியேறினர். கிமு 1595ல் பாபிலோன் நகரம் இட்டைட்டு பேரரசால் அழிந்த பின்னர், காசிட்டு மக்கள் துர் - குரிகல்சு நகரத்தை நிறுவி, 1531ல் காசிட்டு வம்ச ஆட்சியை மெசொப்பொத்தேமியாவில் நிறுவி, தற்கால ஈராக் மற்றும் ஈரானின் பெரும்பகுதிகளை ஆட்சி செய்தனர்.
ஆட்சியாளர்
ஆட்சிக் காலம்
குறிப்பு
இரண்டாம் அகும்
பாபிலோனிற்கு கடவுள் மர்துக் சிலையை திருப்பிக் கொண்டுவருதல்
முதலாம் பர்னபுரியாஷ்
1500
அசிரியாவின்வின் மூன்றாம் புசூர் - அசூர் (கிமு 1503 - 1479) உடன் ஒப்பந்தம் செய்தல்
மூன்றாம் கஷ்டிலியாஷ்
உலம்புரியாஷ்
கிமு 1480
சீலாந்து வம்சத்தவரை வெற்றி கொள்ளல்
மூன்றாம் அகும்
கிமு 1470
கரைந்தாஷ்
கிமு 1410
அசிரியாவின் அசூர் - பெல் - நிசேசு உடன் அமைதி ஒப்பந்தம் செய்தல்
கதஷ்மன் - ஹர்பி
கிமு 1400
சுத்துக்கு ஏதிராக படையெடுத்தல்
முதலம் குரிகல்சு
கிமு 1375
துர் - குரிகல்சு நகரத்தை நிறுவதல்
கதஷ்மான் - என்லில்
கிமு 1374—1360
இரண்டாம் பர்னபுரியாஷ்
கிமு 1359—1333
அசிரிய மன்னர் முதலாம் அசூர் - உபால்லித் சமகாலத்தவர்
கர-ஹர்தாஷ்
கிமு 1333
அசிரிய மன்னர் முதலாம் அசூர் - உபால்லித்தின் பேரன்
நசி - புகாஷ்
கிமு 1333
இரண்டாம் குரிகல்சு
கிமு 1332—1308
அசிரிய மன்னர் என்லில் - நிராரியுடன் போரிடுதல்
நசி - மருத்தாஷ்
கிமு 1307—1282
அசிரிய மன்னர் அதாத் - நிராரியிடம் நாட்டின் பெரும் பகுதிகளை இழத்தல்
கதாஷ்மன் - துர்கு
கிமு 1281—1264
இட்டைட்டு பேரரசர் மூன்றாம் ஹத்துசிலியின் சமகாலத்தவர்
இரண்டாம் கதஷ்மன் - என்லில்
1263—1255
குதுர் - என்லில்
கிமு 1254—1246
நிப்பூர் நகர மறுமலர்ச்சி காலம்
சகரக்தி - சூரியாஷ்
கிமு 1245—1233
நான்காம் கஷ்திலியாசு
கிமு 1232—1225
அசிரிய மன்னர் துகுல்தி - நினுர்தாவால் பதவி நீக்கப்பட்டார்.
என்லில் - நதின் - சுமி
கிமு 1224
அசிரியா இராச்சியத்திற்கு திறை செலுத்தியவர்
இரண்டாம் கதஷ்மன் - ஹர்பி
கிமு 1223
அசிரியா இராச்சியத்திற்கு திறை செலுத்தியவர்
ஆதாத் - சுமா - இட்டின்னா
கிமு 1222—1217
அசிரியா இராச்சியத்திற்கு திறை செலுத்தியவர்
ஆதாத் - சுமா - உசூர்
கிமு 1216—1187
இரண்டாம் மெலி - சிபாக்
கிமு 1186—1172
மர்துக் - அப்லா - இட்டின்னா
கிமு 1171—1159
சபாபா - சுமா - இட்டின்
கிமு 1158
ஈலம் மன்னர் சுத்ருக் - நஹ்குண்டேவால் தோற்கடிக்கப்படல்
என்லில் - நதின் - அஹி
கிமு 1157—1155
ஈலம் மன்னர் இரண்டாம் குடிர் - நஹ்குண்டேவால்
பண்பாடு, மொழி, சமூகம், சமயம்
பாபிலோனியப் பெயர்களை காசிட்டு வம்ச மன்னர்கள் சூட்டிக் கொண்டாலும், காசிட்டு மக்களின் பழங்குடி மரபுப்படி வாழ்ந்தனர். காசிட்டு மக்கள் தங்கள் குலமரபை போற்றினர்.[ 7]
மித்தானி இராச்சிய மக்கள் போன்று காசிட்டு மக்கள், இந்திய-ஐரோப்பிய மொழியை பேசினர்.[ 3]
காசிட்டு வம்சத்தின் இறுதி எட்டு மன்னர்கள் காலத்தில், காசிட்டு மக்கள் அக்காதியம் மொழி பேசினர்.
காசிட்டு மக்கள் அசிரியர்களுடன் திருமண உறவு பூண்டனர்.
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் , 1911.
A. Leo Oppenheim , Ancient Mesopotamia: Portrait of a Dead Civilization , 1964.
K. Balkan, Die Sprache der Kassiten , (The Language of the Kassites ), American Oriental Series , vol. 37, New Haven, Conn., 1954.
D. T. Potts, Elamites and Kassites in the Persian Gulf, Journal of Near Eastern Studies, vol. 65, no. 2, pp. 111–119, (April 2006)
வெளி இணைப்புகள்