இந்து சுயம்சேவாக் சங்கம்
![]() இந்து சுயம்சேவாக் சங்கம் (Hindu Swayamsevak Sangh சுருக்கமாக:HSS) (Hindi: हिन्दू स्वयंसेवक संघ, lit. 'Hindu's volunteer organization'; ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் சகோதர அமைப்புகளில் ஒன்றாகும். இந்தியாவிற்கு வெளியே வெளிநாடுகளில் மட்டும் கிளைகளுடன் செயல்படும் இவ்வமைப்பு சங் பரிவார அமைப்புகளில் ஒன்றாகும். இந்த அமைப்பின் 3289 கிளைகள், 156 நாடுகளில் செயல்படுகிறது.[1] வரலாறு14 சனவரி 1940 அன்று கென்யா நாட்டின் தலைநகரம் நைரோபியில் ஜெகதீஷ் சந்திர சாஸ்திரி என்பவரும், அவரது நண்பவர்களும் இணைந்து பாரதிய சுயம்சேவாக் சங்கம் என்ற பெயரில் நிறுவினர். பின்னர் கென்யா நாட்டின் பிற நகரங்களிலும் இந்த அமைப்பின் கிளைகள் துவக்கப்பட்டது.[2][3]பின்னர் 1947-ஆம் ஆண்டில் இதன் பெயர் இந்து சுயம்சேவாக் சங்கம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் பர்மிங்காம் மற்றும் பிராட்போர்டு நகரங்களில் இந்து சுயம்சேவாக் சகத்தின் கிளை 1966-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia