அசோக் சிங்கால்
அசோக் சிங்கால் (Ashok Singhal) (பிறப்பு: 1926), அகில உலக இந்து அமைப்பான விசுவ இந்து பரிசத்தின் தலைவராக 2011 முடிய இருபதாண்டுகள் செயல்பட்டவர்.[4] உடல் நலக்குறைவால் பதவி விலகிய சிங்காலுக்குப் பின்னர் பிரவீன் தொகாடியா தலைவராக செயல்படுகிறார்.[5] வாழ்க்கைஆக்ராவில் பிறந்த சிங்காலின் தந்தை ஒரு அரசு அலுவலர்[6] பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் 1950இல் உலோகவியல் பொறியியல் பட்டம் பெற்றவர்.[7] 1942 முதல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்துடன் தொடர்புடையவர். பட்டம் பெற்ற பின்னர் ஆர் எஸ் எஸ் முழுநேர பிரச்சாரகராக மாறியவர். தில்லி மற்றும் அரியானா மாநில மண்டல பிரச்சாரகராக செயல்பட்டவர். 1980ஆம் ஆண்டில் விசுவ இந்து பரிசத்தின் இணைச்செயலராகவும், 1984ஆம் ஆண்டில் செயலராகவும் பதவி வகித்த சிங்கால் பின்னர் விசுவ இந்து பரிசத்தின் தலைவராக 2011 முடிய செயல்பட்டார்.[8] ராம ஜென்மபூமி அறக்கட்டளை துவக்கி ராம ஜென்மபூமியில் மீண்டும் ராமர் கோயில் கட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டவர். மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia