ஏகலைவன் கல்வி அறக்கட்டளை (Ekal Vidyalaya Foundation), மலைவாழ் பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக செயல்படும் தொண்டு நிறுவனம் ஆகும்.[1][2] 1999-2020ஆம் ஆண்டு முதல் ஏகலைவன் கல்வி அறக்கட்டளை இந்திய அரசு நிதியுதவி செய்கிறது.[3][4]மகாபாரதம் காப்பியத்தில் வரும் வேட்டுவ சமூக மாணவரான ஏகலைவன் பெயரால் இந்த அறக்கட்டளை இயங்குகிறது. ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் நான்காவது தலைவராக செயல்பட்ட மதுகர் தத்தாத்திரேய தேவ்ரசின் இளைய சகோதரர் பாபுராவ் தேவ்ரஸ் மற்றும் சியாம் குப்தா ஆகியோரால் இந்த அறக்கட்டளை 1986ம் ஆண்டில் இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் நிறுவப்பட்டது.[5] இந்த அமைப்பு மலைவாழ் பழங்குடிகள் வாழும் இடங்களில் ஓராசிரியர் பள்ளிக்கூடங்கள் நடத்துகிறது.
ஏகலைவன் அறக்கட்டளை சார்பில் ஆகஸ்டு 2020 வரை இந்தியா முழுவதும் 102753 பள்ளிக்கூடங்கள் இயங்குகிறது. அதில் 2100 பள்ளிகள் வடகிழக்கு இந்தியாவில் செயல்படுகிறது.[6] 2020ஆம் ஆண்டில் ஏகலைவன் கல்வி அறக்கட்டளை சார்பில் இந்தியாவில் 1,02,753 பள்ளிக்கூடங்கள் இயங்குகிறது.[7][8] ஏகலைவன் கல்வி அறக்கட்டளை நோக்கம் 2030ம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் 2 இலட்சம் கிராமங்களில் துவக்கப் பள்ளிக்கூடங்கள் நிறுவதாகும்.
1996ம் ஆண்டில் நேபாள நாட்டின் 54 மலை மாவட்டங்களில் ஏகலைவன் கல்வி அறக்கட்டளை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது நேபாளத்தில் மலைப்பகுதிகளில் 2,310 துவக்கப் பள்ளிக்கூடங்களில் 60,995 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள்.[9]
செயற்பாடுகள்
கல்வி
ஏகலைவன் கல்வி அறக்கட்டளை 6 முதல் 14 வரையான பழங்குடியின குழந்தைகளுக்கு ஐந்தாண்டு முறை-சாராத இலவசக் கல்வி வழங்குகிறது.[10][11] மேலும் இந்த அறக்கட்டளை மாதந்தோறும் மலைவாழ் மக்களுக்கு ஊரக வளர்ச்சி, உள்ளூர் பிரச்சனைகள் மற்றும் உடல் நலம் குறித்து விழிப்புணர்வு ஊட்டுகிறது.[10]