வீடு திரும்புதல்வீடு திரும்புதல் அல்லது தாய் மதம் திரும்புதல் (Ghar Wāpsi Hindi: घर वापसी) என்பது இந்து, சீக்கியம் மற்றும் சார்ந்த சமயத்திலிருந்து பிற சமயங்களுக்கு மதம் மாறியவர்கள் மீண்டும் தாய் மதமான இந்து மற்றும் சீக்கிய சமயத்தில் மீண்டும் இணைவதற்கு வீடு திரும்புதல் என்பர்.[1] இதனை இந்தியாவில் செயல்படும் விஷ்வ இந்து பரிசத் மற்றும் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம், வீடு திரும்புதல் என்ற நிகழ்ச்சிகள் மூலம் வேற்று மதத்தினரை மீண்டும் இந்து சமயத்தில் சேர்க்கும் செயல் இந்திய நாடு முழுவதும் நடைபெறுகிறது.[2][3] கேரளாவின் ஐந்து மாவட்டங்களிலும், கோவாவிலும் வேற்று மதத்தில் இணைந்த கத்தோலிக்க கிறித்தவர்களை மீண்டும் தாய் மதமான இந்து சமயத்திற்கு மாற்றும் நிகழ்ச்சிகள் நடத்த விஷ்வ இந்து பரிசத் அமைப்பு முயல்கிறது.[4] ஆந்திரா மற்றும் தெலிங்கானா மாநிலத்திலிருந்து 8,000 நபர்கள் மீண்டும் வீடு திரும்புதல் நிகழ்வு மூலம் இந்து சமயத்திற்கு விஷ்வ இந்து பரிசத் மூலம் மீண்டும் தாய் மதமான இந்து சமயத்திற்கு திரும்பியுள்ளனர்.[5] ஏற்கனவே பிற மதங்களுக்கு மாறிய 1,200 நபர்கள் மீண்டும், வீடு திரும்புதல் என்ற நிகழ்ச்சியின் மூலம், இந்து சமயத்திற்குத் திரும்பியுள்ளனர்.[6] வீடு திரும்புதல் என்ற நிகழ்வின் மூலம் தாய் மதமான இந்து மதத்திற்கு மதம் மாற விரும்பும் மஞ்ஹி எனும் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தங்களுக்கு, கல்வி, சுகாதாரம், மேம்பட்ட வாழ்க்கை வசதிகள் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.[7] தாய் மதம் திரும்புதல் என்ற நிகழ்ச்சியின் மூலம் மேற்கு வங்காளத்தில் 100 ஆதிவாசி கிறித்தவர்கள் தாய் மதமான இந்து மதத்திற்கு மதம் மாறியுள்ளனர்.[8] மீண்டும் தாய் மதம் திரும்பும், வீடு திரும்பல் என்ற நிகழ்ச்சியின் மூலம் இந்து மதத்திற்கு மக்கள் மாற்றப்படுவதை வேறு சமயத்தினர் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.[9] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia