இரகுவார்ய தீர்த்தர்

இரகுவார்ய தீர்த்தர்
இறப்புஅம்பி (கர்நாடகம்)
இயற்பெயர்இராமச்சந்திர சாத்திரி
சமயம்இந்து சமயம்
தத்துவம்துவைதம்,
வைணவ சமயம்
குருஇரகுநாத தீர்த்தர்

இரகுவார்ய தீர்த்தர் (Raghuvarya Tirtha) (இறப்பு: 1557) இவர் ஓர் இந்து தத்துவஞானியும், அறிஞரும், இறையியலாளரும், துறவியுமாவார். இவர் மத்துவாச்சாரியாருக்கு அடுத்தடுத்து பதின்மூன்றாவது தலைவராக இருந்தார்.[1] பாரம்பரியத்தின் படி இவர் ஜெயதீர்த்தரின் புகழ்பெற்ற 'நியாய சுத்தம்' என்ற நூலை தனது சீடர்களுக்கு ஏழு முறை கற்பித்தார்.[2]

சைதன்ய மகாபிரபுவுடனான சந்திப்பு

வேதாந்த அறிஞர் பாலதேவரின் கூற்றுப்படி, சைதன்யர், மத்துவாச்சாரியரின் இறையியல் நிலைப்பாட்டை உண்மை என்றும் வேதாந்தத்திற்கு ஏற்பவும் ஏற்றுக்கொண்டார். சைதன்ய சரிதாமிருதம்- மத்திய-லீலாவின் ஒன்பதாம் அத்தியாயத்தின்படி, சைதன்யர் இவரைச் சந்தித்து ஆன்மீக வாழ்க்கையின் வழிமுறைகளையும், முடிவுகளையும், ஒன்பது வகையான ஆன்மீக நடைமுறைகளைப் பற்றி விவாதித்தார். [3]

படைப்புகள்

இவர் பல படைப்புகளை இயற்றினார். ஆனால் இவரது சில படைப்புகளில் நியாயம் பற்றிய லகுபரிக்சா (அல்லது ரகுபரிக்சா), நாராயண பாண்டிதாச்சார்யரின் பிரமேய ரத்னமாலிகா, கிருட்டிண துதி (கன்னட ஒரு பக்தி பாடல்) மட்டுமே கிடைத்துள்ளது. [2]

மேற்கோள்கள்

  1. Das 1972, ப. 108.
  2. 2.0 2.1 Samuel 1997, ப. 118.
  3. Puri 2017, ப. 302.

நூல் ஆதாரங்கள்

  • Sharma, B. N. Krishnamurti (2000). A History of the Dvaita School of Vedānta and Its Literature, Vol 1. 3rd Edition. Motilal Banarsidass (2008 Reprint). ISBN 978-8120815759.
  • Samuel, G. John (1997). Contribution of Karaṇāṭaka to Sanskrit. Institute of Asian Studies.
  • Das, Sambidānanda (1972). Sri Chaitanya Mahaprabhu. Sree Gaudiya Math.
  • Puri, Swami B. P. (2017), Guru: The Universal Teacher, Simon and Schuster, ISBN 978-1683832454


Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya