ஏரண், பண்டைய நகரம்
![]() ![]() ஏரண் (Eran) (Hindi: ऐरण) பண்டைய இந்தியாவின் தற்கால மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள பண்டைய வரலாற்று நகரம் ஆகும். துவக்கால நாணயங்கள் மற்றும் கல்வெட்டுக் குறிப்புகள் இந்நகரத்தை ஏரிகிணா ஐரிகிணா (Airikiṇa) (Hindi: ऐरिकिण) எனக் குறிப்பிட்டுள்ளது. ஏரணின் அமைவிடம்மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சாகர் நகரத்தின் வடமேற்கே 75 கி மீ தொலைவில் வீணா தாலுகாவில் பீணா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு ஒரு சிறு கோட்டையும் உள்ளது. [1] குப்தப் பேரரசின் ஐரிகிணா பிரதேசம் அல்லது ஏர்கிணா பிரதேசத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமாக ஏரண் விளங்கியது.[2] பண்டைய ஏரணில் கிடைத்த 48 அடி உயர கொடி மரம் போன்ற கல்தூண்[3] குறிப்புகளின் படி, வடக்கே யமுனை ஆறு தெற்கே நர்மதை ஆறு பாயும் பரப்புகளை ஆண்ட சுரேஷ்மிசந்திரன் எனும் அரசன் புத்தகுப்தரை மகாராஜா அழைத்தார் எனக் கூறுகிறது. மதுராவில் கிடைக்கப் பெற்ற, புத்தகுப்தர் ஆட்சிக் காலத்திய கௌதம புத்தரின் சிற்பத்தில் உள்ள குறிப்புகள், புத்தகுப்தர் தனது ஆட்சிப் பரப்பை வடக்கு மதுரா வரை நீட்டித்ததாக கூறுகிறது. [4]பண்டைய ஏரண் நகரத்தில் குப்தர்கள் காலத்திய நாணயங்கள், கல்வெட்டுக் குறிப்புகள் பல கிடைத்துள்ளது. வரலாறுஏரண் நகரம் நாக குலத்தவர்களின் தலைநகரமாக விளங்கியது என மகாபாரத்தின், ஆதி பருவத்தில் கூறப்பட்டுள்ளது. [5] மௌரியர்கள், சுங்கர்கள், சாதவாகனர்கள், சகர்கள், நாகர்கள், குப்தர்கள், ஹூணர்கள், காலச்சூரிகள் காலத்திய பழந்தொன்மை மிக்க நினைவுச் சின்னங்கள் ஏரணில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏரணில் நடந்த பத்துக் கூட்டுத் தீக்குளிப்பு தொடர்பான பத்து நினைவுத் தூண்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. [6] ஏரணில் கண்டெடுக்கப்பட்ட தொன்மை ஆவணங்கள்ஏரண் நகரத்தில் பழமைச் சின்னங்கள், நாணயங்கள், கல்வெட்டுக் குறிப்புகள், கோயில்கள், சிற்பங்கள் முதலியன அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கப் பெற்றன. [7] ஏரண் நாணயங்கள்
வரலாறுமௌரியர்கள், சுங்கர்கள், சாதவாகனர்கள், சகர்கள், நாகர்கள், குப்தர்கள், ஹூணர்கள், காலச்சூரிகள் காலத்திய பழந்தொன்மை மிக்க நினைவுச் சின்னங்கள் ஏரணில் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ![]() ![]() ஏரணில் உள்ள முக்கியக் கோயில்கள்1. விஷ்ணு கோயில் [8]
2. வராகர் கோயில்
3. நரசிம்மர் கோயில்
4. பழம் பெரும் அனுமார் கோயில்
5. 48 அடி உயர கருடத் தூண்
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
{{cite book}} : Cite has empty unknown parameter: |Krishna Publication Katra Bajar Sagar= (help); Invalid |ref=harv (help){{cite book}} : Cite has empty unknown parameter: |Aayu= (help); Invalid |ref=harv (help){{cite book}} : Cite has empty unknown parameter: |(empty string)= (help); Invalid |ref=harv (help){{cite book}} : Cite has empty unknown parameter: |(empty string)= (help); Invalid |ref=harv (help){{cite book}} : Cite has empty unknown parameter: |S.K.= (help); Invalid |ref=harv (help)வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia