ஆலம்பூர் பாபநாசி கோயில்கள்
ஆலம்பூர் பாபநாசி கோயில்கள் (Alampur Papanasi Temples) 23 கோயில்களின் தொகுதியாகும். இக்கோயில்கள் 9 முதல் 11ஆம் நூற்றாண்டு முடிய கட்டப்பட்டவைகள் ஆகும். இவை தெலங்காணா மாநிலத்தில், ஜோகுலம்பா மாவட்டதில் ஆலம்பூர் கிராமத்தில் உள்ளது. தற்போது சிதிலமடைந்த இக்கோயில்கள் துங்கபத்திரை ஆறும் மற்றும் கிருஷ்ணா ஆறும் கலக்குமிடத்தில் ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. [1][2][3]இக்கோயில்கள் ஆலம்பூர் நவபிரம்மா கோயில்களிலிருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தில்லி சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள் ஆட்சியின் போது, கிபி 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டுகளில் ஆலம்பூர் பாபநாசி கோயில்கள் சிதைக்கப்பட்டது.[4] சிறிசைலம் நீர் மின் நிலையம் அமைக்க வேண்டி, 1980ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம், பாபநாசிக் கோயில்களின் சிதிலங்களைக் கொண்டு வேறிடத்திற்கு மாற்று அமைத்தனர்.[3][5]
அமைவிடம்பாபநாசி கோயில்கள் ஐதராபாத் (இந்தியா)|ஐதராபாத்]]திற்கு 215 கிலோ மீட்டர் தொலைவிலும், ஹம்பிக்கு வடமேற்கு 240 கிலோ மீட்டர் தொலைவிலும், பாதமிக்கு கிழக்கே 325 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. படக்காட்சிகள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia