சதுர்புஜக் கோயில்
சதுர்புஜக் கோயில் (Chaturbhuj Temple), இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் புந்தேல்கண்ட் பகுதியில், நிவாரி மாவட்டத்தில் உள்ள ஓர்ச்சா நகரத்தில் பேட்வா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த சதுர்புஜக் கோயில் மற்றும் ஓர்ச்சா கோட்டை வளாகத்தை 16-ஆம் நூற்றாண்டில் அடிக்கல் நாட்டி கட்டத் துவங்கியவர் ஓர்ச்சா சமஸ்தானத்தை ஆண்ட புந்தேல இராஜபுத்திர குல மன்னர் மதுகர் ஷா ஆவார். இதனை கட்டி முடித்தவர் அவரது மகன் வீர் சிங் ஆவார்.[1][2][3][4]இக்கோயில் 344 அடி உயரம் கொண்டது. அமைவிடம்சதுர்புஜக் கோயில் குவாலியரிலிருந்து 119 கிலோ மீட்டர் தொலைவில், ஜான்சி-கஜுராஹோ நெடுஞ்சாலையில உள்ளது. இதனருகில் அமைந்த தொடருந்து நிலையம் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜான்சி நகரத்தில் உள்ளது. [5] சிறப்புகள்![]() பேட்வா ஆற்றின் கரையில் இராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சதுர்புஜக் கோயிலின் அடித்தளம் 4.5 மீட்டர் உயரம் கொண்டது. இக்கோயிலின் உயரம் 344 அடி (105 மீட்டர்) உயரம் கொண்டது. [2][6] இதனையும் காண்கமேற்கோள்கள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia