இலக்சனா தேவி கோயில், பார்மௌர்
இலக்சனா தேவி கோயில் (ஆங்கிலம்: Lakshana Devi Temple) என்பது இமாசலப் பிரதேசத்தில் உள்ள குப்தர் காலத்திற்குப் பிந்தைய இந்து ஆலயமாகும். இது தேவி துர்காவுக்கு அவரது மகிசாசுரமர்தினி வடிவத்தில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது 7 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியைச் சேர்ந்தது. இது இந்தியாவின்மிகப் பழமையான மரக் கோயில்களில் ஒன்றாகும். [1] [2] [3] இந்த கோயில் முன்னாள் தலைநகரான பார்மௌரின் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான கட்டமைப்பாகும். இது வரலாற்று நூல்களில் பர்மூர், பார்மாவார், பிரம்மோர் அல்லது பிரம்மபுரா என்றும் குறிப்பிடப்படுகிறது. [4] அதன் கூரை மற்றும் சுவர்கள் பல நூற்றாண்டுகளாக பழுதுபார்க்கப்பட்டுள்ளன. அது ஒரு குடிசை போல தோன்றுகிறது. ஆனால் இமாச்சல இந்து சமூகம் அதன் நுணுக்கமாக செதுக்கப்பட்ட மர நுழைவாயில், உள்துறை மற்றும் கூரையை பாதுகாத்து வருகிறது. இது பிற்கால குப்தர்கள் பாணி மற்றும் அவர்களின் சகாப்தத்தின் உயர் கலையை பிரதிபலிக்கிறது. அதன் கருவறையில் உள்ள பித்தளை உலோக தெய்வம் சிலைக்கு கீழே உள்ள வடிவமைப்பு மற்றும் பிற்கால குப்தர்கள் காலஎழுத்துகள் கொண்ட கல்வெட்டு அதன் பழங்காலத்தை உறுதிப்படுத்துகிறது. [5] [6] மரச் சிற்பங்களில் சைவம் மற்றும் வைணவம் சார்ந்த கருக்கள் மற்றும் கருப்பொருள்கள் அடங்கியுள்ளது. [7] இருப்பிடம்இலக்சனா தேவி கோயில் பார்மௌர் நகரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது 7 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்ட இந்து கோவில்களின் கொத்துக்களில் ஒன்றாகும். இது இமயமலையில், இராவி நதி மற்றும் தாவோலா தார் மலைகளின் வரம்பில் அமைந்துள்ளது. [4] இது சிம்லாவுக்குவடமேற்கே சுமார் 400 கிலோமீட்டர் (250 மைல்), பதான்கோட்டிலிருந்து கிழக்கே 180 கிலோமீட்டர் (110 மைல்) அருகிலுள்ள விமான நிலையம், ஐஏடிஏ: ஐஎக்ஸ்பி), தல்ஹெளசியிலிருந்து சுமார் 110 கிலோமீட்டர் (68 மைல்) தொலைவில் உள்ளது. [8] [9] வரலாறுபார்மௌர் இந்து மலை இராச்சியமான சம்பாவின் தலைநகராக இருந்தது. இப்பகுதியின் அறியப்பட்ட ஆவணப்படுத்தப்பட்ட பண்டைய வரலாறு எதுவும் இல்லை. மேலும் முந்தைய பதிவுகள் பொ.ச. 1 நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் தேதியிட்ட கல்வெட்டுகள் மற்றும் புராண நூல்களின் வடிவத்தில் காணப்படுகின்றன. 12 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சம்பாவைக் குறிப்பிடும் மற்றொரு ஆதாரம் காஷ்மீர் உரை ராஜதரங்கினி என்பதாகும். [4] இத்தலைநகர் மேரு வர்மன் என்பரால் நிறுவப்பட்டது. மேலும் நகரத்திலும் சம்பா பள்ளத்தாக்கின் பிற இடங்களிலும் ஏராளமான கல்வெட்டுகள் அவரது ஆட்சியை உறுதிப்படுத்துகின்றன. பயன்படுத்தப்பட்ட எழுத்துக்கள் மற்றும் பிற எழுத்து வடிவங்களின் சான்றுகள், கி.பி 700 க்கு முந்தையது என்று ஹெர்மன் கோய்ட்ஸ் கூறுகிறார். [10] புதிய தலைநகரம் நிறுவப்பட்டவுடன், மேருவர்மன் இலக்சனா தேவி கோயிலை அமைத்து திறந்து வைத்தார். பர்மௌர் ஒதுங்கிய மலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது படையெடுப்பதற்கும் முற்றுகையிடுவதற்கும் மிகவும் கடினமாக இருந்தது. பார்மௌர் போன்ற தொலைதூரப் பகுதிகள், ரொனால்ட் பெர்னியர் "பெரும்பாலும் முஸ்லீம் படையெடுப்பிலிருந்து காப்பாற்றப்பட்டது" என்று கூறுகிறார். [5] கோய்ட்ஸ் மற்றும் பிற அறிஞர்களின் கூற்றுப்படி, இந்த மத துன்புறுத்தல் இல்லாதது இலக்சனா தேவி கோயிலும், பார்மௌரில் உள்ள பிற கோயிகளும் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கப்படுவதற்கு காரணமாக இருக்கலாம். [11] 1839 ஆம் ஆண்டில் இலக்சனா தேவி கோயிலுக்குச் சென்ற முதல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் கன்னிங்காம் என்பவராவார். அவர் தனது ஒப்பீட்டு பகுப்பாய்வை இந்திய தொல்பொருள் ஆய்வு அறிக்கையில் வெளியிட்டார். [4] கன்னிங்காம், "தூண்கள், கட்டடக்கலைகள் மற்றும் கோவிலின் வாசலின் முக்கோண முன்பகுதிகள் அனைத்தும் மரத்தைக் கொண்டு மிக விரிவாகவும் ஆழமாகவும் செதுக்கப்பட்டவை" என்று குறிப்பிடுகிறார். கதவுகளின் செதுக்கல்கள் வெயில் எளிதில் உட்புகாதவாறு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, கன்னிங்காம் . கட்டிடத்தின் வெளிப்புற வாசல் நன்கு பாதுகாக்கப்பட்டு "அழகாக செதுக்கப்பட்டுள்ளது" என்று எழுதிகிறார். ஜீன் வோகல் என்ற வரறாற்றாலர் 1900களில் சம்பா மாநிலத்திற்கு வருகை புரிந்துள்ளார். மேலும் 1911 ஆம் ஆண்டில் சம்பா மாநிலத்தின் பழங்காலத்தில் கோவிலைப் பற்றியும் எழுதியுள்ளார். [12] காலம்கோயிலின் கட்டிடக்கலை, திட்டம், கலைப்படைப்பு, பாணி மற்றும் அதன் கருவறையில் உள்ள பித்தளை சிலை பீடத்தில் காணப்படும் கல்வெட்டு ஆகியவற்றின் அடிப்படையில் இலக்சனா தேவி கோயில் சுமார் 700 ஆம் ஆண்டுகளை சேர்ந்ததென கூறப்படுகிறது.. [1] [2] கல்வெட்டு இவ்வாறு கூறுகிறது: மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia