ஒட்டங்காடு
ஒட்டங்காடு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட கிராமம். இது பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டத்திற்கு உட்பட்டது. குக்கிராமங்கள்
ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சி கிராமமாகும். இது காவிரி ஆற்றின் கல்லணை கால்வாய் கோட்டம் பிரிவுகளின் டெல்டா பகுதி ஆகும். மேலும் காவிரி ஆற்றின் பிரிவுகளில் ஒன்றான அக்ணி ஆறும் பாய்கின்றது.நெல், தென்னை முதன்மைப் பயிராகும். அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் இங்கு பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். மேலும், அருள்மிகு அய்யனார் கோவில், அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், அருள்மிகு ஐயப்பன் கோவில், அருள்மிகு கற்பக விநாயகர் கோவில், அருள்மிகு பிடாரி அம்மன் கோவில் போன்ற ஆலயங்கள் உள்ளன. போக்குவரத்துஇரயில் மற்றும் பேருந்து மூலம் இங்கு சென்றடையும் வகையில் உள்ளது. கிராமத்தின் மையப்பகுதியில் இரயில் நிலையம் உள்ளது. பட்டுக்கோட்டையில் இருந்து பேராவூரணி செல்லும் இரயில் மற்றும் பேருந்து இந்த கிராமத்தின் வழியாக செல்கிறது. இந்த கிராமத்தின் 10 கி.மீ. தொலைவில் கடல் மற்றும் சுற்றுலா தலமான மனோரா அமைந்துள்ளது. அருகில் உள்ள கிராம மக்களின் தேவைகளையும் இவ்வூர் பூர்த்தி செய்கிறது.
அரசியல்இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பேராவூரணி சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது. [4] ஆதாரங்கள்
2.[1] |
Portal di Ensiklopedia Dunia