கந்தசாமி பிரபு
கந்தசாமி பிரபு (Kanthasamy Prabu, பிறப்பு: 7 மார்ச் 1985) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] வாழ்க்கைக் குறிப்புகந்தசாமி பிரபு மட்டக்களப்பு மகாசனக் கல்லூரி, மட்டக்களப்பு மெதடிசுத மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். தேசிய கணக்கியல் உயர் டிப்புளோமா பட்டம் பெற்றவர். கல்விக் கூட்டுறவுச் சங்கத்தின் கிழக்கு மாகாணப் பிரதிக் கணக்காளராகப் பணியாற்றியவர். அரசியலில்இவர் மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக செயற்படுகிறார். இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு, தெரிவு செய்யப்படவில்லை. 2024 நவம்பர் 14 இல் நடைபெற்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு 14,856 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தியின் சார்பாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு வேட்பாளர் இவர் ஆவார்.[2][3][4] தேர்தல் வரலாறு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia