பிமல் இரத்நாயக்க
பிமல் நிரோசன் இரத்நாயக்க வீரக்கூன் (Bimal Nirsohan Rathnayake Weerakoon) இலங்கை இடதுசாரி அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் உறுப்பினர் ஆவார்.[2] சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் தலைவராக இருந்தவர்.[1] 2014 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் தெசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.[1] இரத்நாயக்க முதன் முதலாக மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளராக 2001 நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 4,240 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] பின்னர் 2004 தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு 116,736 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] 2010, 2015 தேர்தல்களில் மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளராக கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் சரத்சந்திர மாயாதுன்ன தனது பதவியைத் துறந்ததை அடுத்து, அவருக்குப் பதிலாக பிமல் இரத்நாயக்க தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia