காஞ்சிபுரம் இராமநாதீசுவரர் (இராமநாதர்) கோயில் (இராமநாதேசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ளசிவக்கோயில்களில் ஒன்றாகும். மேலும், இராமபிரான்இராவணனை சமரித்த தோசம் நீங்குவதற்கு வழிபட்ட கிழக்கு பார்த்த சன்னதியாக அறியப்படும் இக்கோயில் குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]
இராமர் வழிபட்ட சிவலிங்கம் என்று செவிவழிச் செய்தியாக உள்ளது. இராவணனை அழித்த பிறகு இராமர் இராமேசுவரம் முதலான இடங்களில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டுள்ளார். அவ்வாறு வழிபட்ட ஒரு சிவலிங்கம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவின் முனையில் இராமநாதேசம் என்ற சிவத்தலம் உள்ளது.[2]
தல வரலாறு
இராவணனை அழித்த இராமபிரான் அப்பாவந் தீர சேதுவில் சிவலிங்க வழிபாடாற்றி, பின்னர் காஞ்சி நகரை அடைந்து இராமநாதரை பிரதிட்டை செய்து வழிபட்டுச் சென்றார்.[3]