குந்தூஸ் மாகாணம்
குந்தூஸ் (Kunduz or Qunduz (Persian: قندوز, பஷ்தூ: کندوز) என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடக்குப் பகுதியில் தஜிகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. மாகாணத்தின் மக்கள் தொகையானது சுமார் 953,800, ஆகும். இது பல்லின மக்களைக் கொண்ட, பெரும்பாலும் பழங்குடி மக்களைக் கொண்ட மாகாணமாகும். மாகாணத்தின் தலைநகராக குந்தூசு நகரம் செயல்படுகிறது. குண்டுஸ் விமான நிலையமானது மாகாண தலைநகரத்திற்கு அடுத்து அமைந்துள்ளது. குந்தூஸ் மாகாணத்தில் குண்டுஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கு முதன்மையான பகுதியாக உள்ளது. இந்த ஆறானது தெற்கிலிருந்து வடக்காக பாய்ந்து ஆமூ தாரியா ஆற்றில் கலக்கிறது, இது ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் எல்லைகளுக்கு இடையில் பாய்கிறது. புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலமானது சேர்கான் பண்டார் பகுதியில் ஆமு தாரியா ஆற்றைக் கடக்கிறது. இந்த ஆறும் அதன் துணை ஆறுகள், வரத்துக் கால்வாய்கள் போன்றவை மாகாணத்தின் நீர்பாசணத் தேவைக்கான முதன்மை ஆதாரங்களாக உள்ளன. வரலாறுஇப்பகுதியானது கடந்த காலத்தில் பல பேரரசுகளின் பகுதியாக இருந்தது. 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஆப்கானிய துரானி பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. 1920 களின் தொடக்கத்தில் வடக்கில் உருசிய துருக்கித்தானில் இருந்து ஒரு பெரிய குடிபெயர்வு நடந்தது. ஷேர் கான் நாசரின் ஆட்சிக் காலத்தில், குண்டுஸ் மாகாணமானது ஆப்கானிஸ்தானின் மாகாணங்களின் செல்வந்த மாகாணங்களில் ஒன்றாக ஆனது. முக்கியமாக ஆப்கானிய போருக்குப் பின்னர் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆப்கானிஸ்தானில் ஸ்பின்சர் பருத்தி நிறுவனத்தை நாசர் நிறுவியதன் காரணமாக இது நடந்தது. ஆப்கானிஸ்தான் போரின்போது குந்தூஸ் நேட்டோ படைகள் 2001 நவம்பரில் கைப்பற்றின. குந்தூஸ் மாகாண நேட்டோ- ஐஎஸ்ஏஎப் மறுசீரமைப்புக் குழுவில் 4000 ஜெர்மானியப் படையினரைக் கொண்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு தலிபான் போராளிகள் இந்த பகுதிக்குள் ஊடுருவுவதற்கு முன்னர் வரை இந்த மாகாணம் அமைதியாக இருந்தது.[3] அரசியலும், நிர்வாகமும்குந்தூஸ் மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் அசாதுல்லா ஓமர்சல் ஆவார்.[4] மாகாணத்தின் தலைநகராக குந்தூஸ் நகரம் உள்ளது. மாகாணம் முழுவதுமான அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) மூலம் கையாளப்படுகிறது. குந்தூஸ் மாகாணத்தை ஒட்டியுள்ள தாஜிஸ்தான் எல்லைப் பகுதியை ஆப்கானிய தேசிய காவல்துறையின் (ஏஎன்பி) ஒரு பிரிவான ஆப்கானிய எல்லை பொலிசால் (ஏபிபீ) கண்காணிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. ஆப்கானிய எல்லை பொலிசு மற்றும் ஆப்கானிய தேசிய பொலிசு போன்றவற்றை மாகாண காவல்துறைத் தலைவர் வழிநடத்துகிறார். இவர் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ஏஎன்எஸ்எப்) போன்றவற்றிற்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது. 2015 செப்டம்பர் 28 அன்று, ஆப்கானிய தலிபான்கள் குந்தூஸ் மாகாணத்தை கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போக்குவரத்துஇந்த மாகாணத்தில் உள்ள குந்தூஸ் வானூர்தி நிலையத்தில் இருந்து 2014 மே முதல் காபூலுக்கு நேரடியாக விமான சேவை வழங்க திட்டமிட்டது. பாஜி போயோனில் உள்ள தஜிகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் பாலமானது இந்த மாகாணத்தை தஜிகிஸ்தானுடன் இணைக்கிறது. பொருளாதாரம்வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் மாகாண மக்களின் முதன்மைத் தொழிலாக உள்ளது. பழங்களும், காய்கறிகளுமே மிகவும் பொதுவாக வேளாண் பொருட்களாக உள்ளன, என்றாலும் ஓரளவு பருத்தியும், எள்ளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.[5] விவசாயிகளுக்கு நீர் பற்றாக்குறையை சிக்கலை எதிர்கொள்கின்றனர்.[6]குண்டுசில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆடை உற்பத்தி, உலோக வேலை, தச்சு வேலை போன்றவற்றில் தொழிலாளர்களாக உள்ளனர். நலவாழ்வு பராமரிப்புஇந்த மாகாணத்தில் தூய்மையான குடிநீர் கிடைக்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை 2005 ஆம் ஆண்டு 25% என்ற விகிதத்தில் இருந்தது, இது 2011 ஆண்டு 16% என குறைந்துள்ளது.[7] திறமையான பிரசவ உதவியாளர் மூலமாக பிரசவம் பார்க்கும் மக்களின் விழுக்காடு 2005 ஆண்டில் 6 % என்ற எண்ணிக்கையில் இருந்து 2011 ஆண்டு 22 % என உயர்ந்தது. கல்விமொத்த கல்வியறிவு விகிதம் (6+ வயதுக்கு மேற்பட்டவர்களில்) 2005 ஆண்டு 33% என்று இருந்தது. 2011 இல் இது 20% என குறைந்துள்ளது. மக்கள்வகைப்பாடு![]() ![]() குந்தூஸ் மாகாணத்தில் நம்பகமான மக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றாலும், மாகாணத்தின் மக்கள் தொகை சுமார் 953,800 என மதிப்பிடப்பட்டுள்ளது.[2] மாகாணமானது பல இன மக்களைக் கொண்டதாகவும், பெரும்பாலும் கிராமப்புறமாகவும் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பஷ்தூன் மக்கள் 30%, உஸ்பெக்குகள் 27% தாஜிக்குகள் 27% துர்க்மென் 9.4% கசாரா மக்கள் 3% அரபு மக்கள் 4.6% ஆக உள்ளனர். மேலும் சிறிய எண்ணிக்கையில் பாஷாயி, பலோச், நர்சிஸ்டானின் போன்ற மக்கள் குழுவினர் வாழ்கின்றனர்.[8][9] மாகாணத்தில் சுமார் 94% மக்கள் சுன்னி இஸ்லாமியர்கள் மற்றும் 6% ஷியா இஸ்லாமியர்களாக உள்ளனர். இங்கு பெரும்பான்மையாக பாஷ்டோ, தாரி பாரசீகம், உஸ்பெக்கி ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia