லோகார் மாகாணம்
லோகார் (Logar (பஷ்தூ/தாரிلوگر) என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. நூற்றுக் கணக்கான கிராமங்களை உள்ளடக்கிய இந்த மாகாணமானது, ஏழு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் தலைநகராக புல்-ஐ அலம் உள்ளது. 2013 ஆம் ஆண்டளவில், லோகார் மாகாணத்தின் மக்கள் தொகை 373,100 ஆகும். இது பல இன பழங்குடி மக்கள் வாழும் பகுதியாக உள்ளது. இதில் பஷ்துன் இனத்தினர் குழுவில் 60 சதவிகிதமும், தாஜிக்குகளும், கசாராக்குகளும் மீதமுள்ளவர்களாவர். லோகர் ஆறானது தாகாணத்தின் மேற்குப் பகுதி வழியாக நுழைந்து வடக்கு நோக்கி செல்கிறது. வரலாறுஇஸ்லாமுக்கு முந்தைய காலம்லோகார் மாகாணம் சந்திரகுப்த மௌரியரின் தலமையிலான மௌரிய பேரரசால் வெற்றி கொள்ளப்பட்டது. மௌரியர்களால் இப்பிரதேசத்தில் பௌத்த சமயம் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் மௌரியர்கள் மத்திய ஆசியாவில் இன்னும் பல பிரதேசங்களை உள்ளூர் பாக்டிரியன் படைகளிடம் இருந்து கைப்பற்றும் நோக்கத்துடன் திட்டமிட்டு இருந்தனர் இதனால் செலியூஷியா சந்திரகுப்த மௌரியருடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டு, இந்துகுஷ் மலைகளுக்கு தெற்குப் பிரதேசத்தை மௌரியர்கள் கட்டுப்பாட்டில் விடுத்து, 500 யானைகளை பரிசாக அளித்தான். ![]() ![]() வடமேற்கில் தங்களை வலுப்படுத்திக் கொண்ட, சந்திரகுப்தர் நந்த பேரரசை கிழக்கு நோக்கி நகர்த்தினார். ஆப்கானிஸ்தான் நாட்டில் குறிப்பிடத்தக்க அளவில் பண்டைய புத்த மத பாரம்பரிய மற்றும் கலை மிச்சங்கள் பரந்த அளவிலான தொல்லியல் கண்டுபிடிப்புகள் மூலம் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. வரலாற்றில் கௌதம புத்தர் (கி.மு 563 முதல் 483) தன் வாழ்நாளில் பால்க் பகுதிக்கு வரவில்லை என, தன் பதிவுகளில் கூறுகிறார் சுவான்சாங். அண்மைய வரலாறுசோவியத்-ஆப்கானிய போரின்போது, லோகாரானது பாப் அல் ஜிஹாத் (ஜிஹாதிகளின் சாவின் வாயில் ) என சில ஆப்கானியர்கள் மத்தியில் அறியப்பட்டது. ஏனெனில் அது அமெரிக்க ஆதரவு / பயிற்சி பெற்ற முஜாஹிதீன் குழுக்களுக்கும் சோவியத் ஆதரவுடைய ஆப்கானிய அரசாங்க துருப்புகளுக்கும் இடையே கடுமையான போர்க்களமாக மாறியது. பாகிஸ்தானிலிருந்து வந்த முஜாகிதீன் கிளர்ச்சியாளர்களின் பிரதான பாதைகளில் இதுவும் ஒன்று. நாட்டின் மற்ற பகுதிகளைப் போலவே, லோகாரும் 1980 களில் பெரும் சண்டைகளையும் கண்ட பகுதியாகும்.[2] 1982 ஆம் ஆண்டு மாகாணத்திற்கு வந்த ஸ்வீடிஷ் பத்திரிகையாளர் பார்ஜ் அல்வ்விஸ்ட், இவ்வாறு எழுதினார்: "லோகர் மாகாணத்தில் எல்லா இடங்களிலும் இடிபாடுகள் தவிர வேரொன்றும் இல்லை".[3] சோவியத் நடவடிக்கையின்போது எரியக்கூடிய நீர்மங்களைப் பயன்படுத்தி குண்டுவீச்சுகளை நிகழ்த்தியது, இதன் நோக்கம் போராளிகளின் மறைவிடங்களை அழித்தல், குடிநீரை நஞ்சாக்குதல், பயிர்கள் மற்றும் விவசாய நிலங்களை அழித்தல் ஆகும். இந்த நிகழ்வுகள் கண்ட ஒரு எழுத்தாளர், லோகானில் சோவியத்தின் செயல்களை ஒரு இனப்படுகொலை என்று வாதிடுட்டுள்ளார். இங்கு செயல்பட்ட குறிப்பிடத்தக்க கிளர்ச்சி போராளிகள் பாஸ்லூல்லா முஜ்படிடி, சையட் ரசுல் ஹஷிமி, மாலிம் தோர், முகம்மது வலி நசிரி, தஹர் ஷிர்சாத், அசடுல்லா பலாஹ் ஆகியோர் ஆவர்.[சான்று தேவை] 1995 வாக்கில் தலிபான் அரசாங்கத்திடம் மாகாணம் வீழ்ந்ததுது. 2001 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தலிபான்கள் அகற்றப்பட்டு, கர்சாய் தலைமையிலான நிர்வாகம் உருவான பின்னர், சர்வதேச பாதுகாப்பு உதவிப் படை (ISAF) மற்றும் ஆப்கானிய தேசிய பாதுகாப்பு படைகள் (ANSF) படிப்படியாக இப்பகுதியின் பாதுகாப்பை தங்கள் வசம் எடுத்துக்கொண்டன. 2008 மார்ச்சில் லோகார் மாகாண மறுசீரமைப்பு குழு நிறுவப்பட்டது. இது உள்ளூர் மக்களுக்கு பாதுகாப்பு, அபிவிருத்தி, வேலைகள் உள்ளிட்ட இது பல நன்மைகளை செய்துவருகிறது. இவ்வாறான நிலையில் இப்பகுதியில், தலிபான் கிளர்ச்சியாளர்கள் பெரும் தொந்தரவை ஏற்படுத்துகின்றனர். அவர்கள் முக்கிய செயல்களாக, பொதுமக்கள் பகுதியில் தற்கொலைத் தாக்குதல்கள், மற்றும் ஆப்கானிய அரசாங்க ஊழியர்களை படுகொலை செய்தல் ஆகியவை உள்ளதாக உள்ளன. 2014 ஆகத்து 19 இல், தலிபான்களால் மிகப்பெரிய தாக்குதல் நடந்தது. இதில் மாகாணத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் நோக்கத்துடன் 700 போராளிகள் ஈடுபட்டனர்.,[4] இதற்கிடையில் 2014 திசம்பரில் நேட்டோ தலைமையிலான வெளிநாட்டு படையணியின் விமானத் தாக்குதலில் மூன்று பொதுமக்களை தவறாக கொன்றது.[5] நிலவியல்![]() லோகார் மாகாணமானது அதன் வடக்கு மற்றும் நடுப்பகுதிகள் ஆற்றுப் பள்ளத்தாக்காக குறிப்பிடப்படுகிறது. மேலும் அதன் கிழக்கு, தெற்கு, தென்மேற்கு பகுதிகள் கரடுமுரடான மலைகள் சூழ்ந்த பகுதியாக உள்ளது. கிழக்கில் உள்ள அஸ்ரா மாவட்டமானது கிட்டத்தட்ட முழுமையாக மலைப்பகுதியாகும். தெற்கில் உள்ள பாக்தியா மாகாணத்திற்கு பயணிப்பவர்களுக்காக, ஆப்கானிஸ்தான் சர்வதேச புனரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக மாகாணத்தில் உள்ள டெரா கணவாயில் 2896 மீட்டர் ஏற்ற சாலைப்பணி அண்மையில் முடிக்கப்பட்டது. காபூல்-கோஸ்ட் நெடுஞ்சாலையானது லாகார் மாகாணத்தின் வடக்கு-தெற்கு வழியாக செல்கிறது. அரசியலும், நிர்வாகமும்மாகாணத்தின் கடைசி ஆளுநர் அர்சலா ஜமால் ஆவார். இவர் ஆப்கானிய-எதிர்ப்பு படைகளால் படுகொலை செய்யப்பட்டார். இவர்கள் தலிபான் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மாகாணத்தின் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) மூலம் கையாளப்படுகிறது. அண்டை நாடான பாக்கிஸ்தானின் எல்லைப் பகுதிகளை ஆப்கான் எல்லைக் காவல் படைகளால் (ஏபிபீ) கண்காணிக்கப்படுகிறது. ஆப்கானிய எல்லை பொலிசு மற்றும் ஆப்கானிய தேசிய பொலிசு போன்றவற்றை மாகாண காவல்துறைத் தலைவர் வழிநடத்துகிறார். இவர் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ஏஎன்எஸ்எப்) போன்றவற்றிற்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது. தலைநகரம்![]() லோகார் மாகாணத் தலைநகரான புல்-ஐ அலம் நகரானது அதே பெயரிலான மாவட்டத்தில் உள்ளது. இது காபூலில் இருந்து கோஸ்ட்டுக்குச் தெற்கு மற்றும் தென்கிழக்காக செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது. தலிபான்களின் வீழ்ச்சிக்குப் பிறகு புல்-ஐ அலம் புனரமைக்கப்பட்டது. காபூலுக்கான நெடுஞ்சாலைப் பணிகள் 2006 இல் முடிவடைந்தத பிறகு, நாட்டின் தலைநகருக்குச் செல்லும் பயண நேரம் குறைத்தது. கூடுதலான பள்ளிகள், வானொலி நிலையங்கள், ஒரு பெரிய ஆப்கான் தேசிய காவல் துறை மையம் ஆகியவை நகரத்தின் தெற்கே அமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆப்கான் நகரங்களைப் போலவே, இந்த நகராட்சியில் குறைந்த திட்டமிடல் அல்லது சேவைகள் உள்ளன. டீசல் மின்னாக்கிகளால் மின்சாரம் வழங்கப்படுகிறது. கிணறுகளே குடிநீரின் முதன்மை ஆதாரமாக உள்ளன. நலவாழ்வு பராமரிப்புஇந்த மாகாணத்தில் தூய்மையான குடிநீர் கிடைக்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை 2005 ஆம் ஆண்டு 45% என்ற விகிதத்தில் இருந்தது, இது 2011 ஆண்டு 14% என குறைந்துள்ளது.[6] திறமையான பிரசவ உதவியாளர் மூலமாக பிரசவம் பார்க்கும் மக்களின் விழுக்காடு 2005 ஆண்டில் 9 % என்ற எண்ணிக்கையில் இருந்து 2011 ஆண்டு 73 % என உயர்ந்தது. கல்விமொத்த கல்வியறிவு விகிதம் (6+ வயதுக்கு மேற்பட்டவர்களில்) 2005 ஆண்டு 21% என்று இருந்தது. 2011 இல் இது 30% என உயர்ந்துள்ளது. லோகார் மாகாணத்தின் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் 2005 ஆம் ஆண்டில் 21% ஆக இருந்தது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு (31%) ஆண்கள் கல்வியறிவு உள்ளவர்களாக உள்ளனர், பெண்களில் பத்தில் ஒரு பகுதியினருக்கும் குறைவானவர்களே (9%) கல்வியறிவு பெற்று உள்ளனர். மாகாணத்தில் சுமார் 81,538 மாணவர்களுக்கு 168 ஆரம்ப மற்றும் மேல்நிலை பள்ளிகள் உள்ளன. லோகார் மாகாணத்துப் பள்ளிகளில் கிட்டத்தட்ட 2,082 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.[7] மாகாணத்தில் பெண்களுக்கு பல பள்ளிகள் உள்ளன, இவை பெரும்பாலும் கோஷி மற்றும் புல்-இ-ஆமாமில் அமைந்துள்ளன. சார்ர்க்கிலும் பாரக்கி பாராக்விலும் மிகுதியான அளவில் தலிபான்களின் நடமாட்டம் உள்ளதால், லோகாரில் பெண் கல்விக்கு சுதந்திரம் இல்லாத நிலை உள்ளது.[8] 2007 ஆம் ஆண்டின் படி, மாகாணத்தின் எழுத்தறிவு விகிதம் 17% ஆக இருந்தது. மக்கள்வகைப்பாடு![]() ![]() 2013 ஆண்டின் படி லோகான் மாகாணத்தின் மக்கள் தொகையானது சுமார் 373,100,[1] ஆகும். இங்கு பல்லின மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் பழங்குடி மக்களாவர். மாகாண மக்களில் 60 விழிக்காடு பெரும்பான்மையானராக பஷ்டூன் குழுக்களாவர். எஞ்சியவர்கள் தாஜிக் மற்றும் கசாரா மக்களாவர்.[9][10] மாவட்டங்கள்2005 வரை இந்த மாகாணமானது நிர்வாக வசதிக்காக ஐந்து மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. அதே ஆண்டு அண்டை மாகாணமான பாக்டியாவில் இருந்து அஸ்ரா மாவட்டத்தை பெற்றது. மேலும் சர்க்கா மாவட்டத்தில் இருந்து பிரித்து புதிய மாவட்டமாக கர்வரின் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia