கோர் மாகாணம்
கோர் ( Ghōr (Pashto/Persian: غور), also spelled Ghowr or Ghur, என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நடு ஆப்கானிஸ்தானின் வடமேற்கில் அமைந்துள்ளது. மாகாணத்தில் நூற்றுக்கனக்கான கிராமங்களை உள்ளடக்கிய பத்து மாவட்டங்கள் உள்ளன. மாகாணத்தின் மக்கள் தொகை சுமார் 657,200 ஆகும்.[2] சாங்சரன் ( 2014 க்குப் பிறகு ஃபிருசுகா என அழைக்கப்படுகிறது) நகரம் மாகாணத்தின் தலைநகராகும். சொற்பிறப்பு"கோர்" என்ற பெயர், அவெஸ்தானில் கைரே என்றும், சமசுகிருதத்தில் கிரி மற்றும் மத்திய பாரசீககத்தில் கார் என்றும், நவீன பாரசீகத்தில் கோ எனவும், சொக்டியனில் கோர்- / குர்- எனவும், பின்னர் வளர்ந்த பாட்ரிக் மொழியில் ஜ்ராவ் (மேலும் பரவட்டா) என்றும் அழைக்கப்பட்டது இதன் பொருள் "மலை" என்பதாகும், நவீன பஷ்தூவில் கர் எனவும், பமீரின் மொழிகளில் gar- மற்றும் ghalcca- ("மலை") எனவும் அழைக்கப்பட்டது. வரலாறு
கோர் இனத்தவர்கள் குர்திஸ் காலகட்டத்தில் முற்றிலும் இஸ்லாமியர்களாக மாற்றப்பட்டனர். 12 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு, இந்துக்கள், ஜோரோஸ்ட்ரியர்கள், பௌத்தர்கள் மற்றும் ஒரு சிறிய எண்ணிக்கையிலான யூதர்கள் ஆகியோர் வாழும் பகுதியாக இந்த இடம் இருந்தது. 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் கோரில் லித்துவேனியா தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கி.மு 5000 காலகட்டத்தைச் சேர்ந்த பழமையான குடியிருப்புகள் கண்டறியப்பட்டன.[3] சாங்சரன் பகுதியில் ஒரு சில அரண்மனைகள் மற்றும் பிற பாதுகாப்பு அரண்களின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஹரிரிட் ஆற்றுப் பகுதியில் கைகளால் குடையப்பட்ட ஒரு பௌத்த மடாலயம் கண்டறியப்பட்டது. இது முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது. இந்த செயற்கை குகைகள் பௌத்த பிக்குகளின் தினசரி வாழ்க்கைக்கான ஆதாரத்தைக் கொண்டுள்ளது.[4] பல அறிஞர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் ஜான் மெக்லியோட் போன்றவர்கள் கோர் பகுதியை கஜினி முகமது வெற்றி கொண்ட பிகே கோர் மக்கள் இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டதாக குறிப்பிடுகின்றனர்: நடு ஆப்கானிஸ்தானில் இருந்த மக்கள் இஸ்லாமிற்கு கஜினி முகமதுவால் மாற்றப்பட்டனர்.[5] இஸ்தாக்ரி மற்றும் இபின் ஹக்கல் போன்ற பாரம்பரிய முஸ்லீம் வரலாற்று ஆசிரியர்கள் கோர் மக்களை இஸ்லாமியர்களாக மாற்றியதாக கூறப்படும் கஜினியின் காலத்திற்கு முன்பு கோர் இஸ்லாமியர் அல்லாத நாடாக இருந்ததை உறுதிப்படுத்துகின்றனர். ![]() அரசியல் மற்றும் ஆட்சிமாகாணத்தில் ஆளுநராக சிமா ஜோயிண்டா என்பவர் இருந்தார். அவருக்குப்பின்னர் ஆளுநராக பெறுப்பு வகித்தவர் சையட் அன்வர் ரஹ்மதியா என்பவராவார். கோர் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் இவராவார். மேலும் நாட்டில் ஆளுநர் பதவிக்கு வந்த மூன்றாவது பெண்ணுமாவார். இவருக்கு பதிலாக 2015 திசம்பர் 21 இல் தற்போதைய ஆளுயர் குலாம் நசீர் கோஸ்ஸால் நியமிக்கப்பட்டார். கோர் மாகாணத்தின் தலைநகரான ஃபிரோஸ்கோ நகரம் உள்ளது. மாகாணத்தின் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளையும் ஆப்கானிய தேசிய காவல் துறையால் (ஏஎன்பி) கட்டுப்படுத்தப்படுகின்றது. காபூலின் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக காவல் தலைவர் உள்ளார். ஏஎன்பி போன்றவற்றுக்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது. போக்குவரத்து2014 செப்டம்பர் வரை, மாகாணத் தலைநகரின் சக்ரச்சார் விமான நிலையத்திலிருந்து, காபூலுக்கும் ஹெரத்துக்கும் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்ட விமானங்கள் இருந்தன. கோர் மாகாணத்தில் பிற மாகாணங்களுடன் ஒப்பிடும்போது கணிசமான பெண் ஓட்டுநர்கள் உள்ளனர். 2013 ஆம் ஆண்டு வரை, மாகாணத்தின் சாலைகள் மிக மோசமானதாகவும், பெரும்பாலும் ஆறுகளைக் கடக்க பாலங்கள் இல்லாமலும் இருந்தது.[6] பொருளாதாரம்மாகாணத்தின் பொருளாதாரமானது பெரிய அளவில் வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பை ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி பல இளைஞர்கள் ஹெராட் அல்லது ஈரானில் பணியாற்றுவதற்காக மாகாணத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், இங்கு வாழும் ஒரு சிறிய சதவீதத்தினர் ஆசிரியர், அரசு அதிகாரிகள், நெசவாளர், தச்சர், தையல்காரர் ஆகிய பணிகளை மேற்கொண்டவர்களாக உள்ளனர். மக்கள்தொகையில் பாதிக்கும் மேலானோர் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காக்கூட பொருளீட்ட இயலாத நிலையில் உள்ளனர்.[7] தாலிபனின் வெளியேற்றத்தின் காரணமாக பிராந்தியத்தில் மீண்டும் ஓபியம் உற்பத்தி செய்யப்படுவதால் உள்ளூர் வருமானம் அதிகரித்தது, பொருளாதார ரீதியாக அதிக லாபகரமான விளைச்சலாகவும் உள்ளது. நலவாழ்வுசுத்தமான குடிநீர் கிடைக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை 2005 இல் 14% என்ற நிலையில் இருந்து 2011 இல் 9% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.[8] 2005 இல் நிகழ்ந்த பிரசவங்களில் 9% பயிற்சியுடைய தாதிகளின் உதவியோடு நிகழ்ந்தது. இது 2011 இல் 3% ஆக வீழ்ச்சியடைந்த்து. கல்விஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் (வயது 6+ ) 2005 இல் 19% ஆக இருந்து 2011 இல் 25% என உயர்ந்துள்ளது. முதன்முதலில் கோர் உயர் கல்வி நிறுவனமாக கோர் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. கோர் பல்கலைக்கழகமானது கணிசமான எண்ணிக்கையில் 500 மாணவர்களைக் கொண்டுள்ளது. அதில் கணிசமான பெண்களும் பயில்கின்றனர். ஃபிருசோகோ, டேய்ரா மற்றும் லால் மாவட்டங்களில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பல உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளில் (கன்கோர்) கலந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையானது நூற்றுக்கணக்கில் இருந்து ஆயிரக்கணக்காக உயர்ந்துள்ளது. பல வேளாண் மற்றும் மருத்துவப் பள்ளிகளும் நிறுவப்பட்டுள்ளன. ஒரே ஒரு செவிலியர் பள்ளியும் உள்ளது. மேலும் கோர் மாகாணத்தில் அரசு சார்பற்ற அமைப்புடன் இணைந்து ஒரு மருத்துவமனை நடத்தப்படுகிறது. மக்கள்வகைப்பாடுதற்போது கோர் மாகாணத்தின் மக்கள் தொகை 635,302 ஆகும். இங்கு கசாரா, தாஜிக், உஸ்பெக்ஸ் போன்ற இனத்தவர் கனிசமாண எண்ணிக்கையிலும், பஷ்தூன் மக்கள் சிறிய சமூகமாகவும் உள்ளனர்.[9][10] மாகாணத்தில் பெரும்பான்மையான இனத்தவர்கள் கசாரா மக்களாவர்.[11][12] நிலவியல்இந்து குஷ் மலைகளுடன் கோர் நிலப்பரப்பு முடிவடைகிறது. கோர் கடல் மட்டத்திலிருந்து 2,500 மீட்டர் உயரத்தில் உள்ளது குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் பனியால் பாதைகள் மூடப்படுகிறது. கோடைக்காலத்தில் வறட்சிக்கு உள்ளாகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia