தகார் மாகாணம்
தகார் (Takhar Persian: تخار; பஷ்தூ: تخار ولايت) என்பது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடகிழக்குப் பகுதியில் தாஜிகிஸ்தானையடுத்து அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் எல்லைகளாக கிழக்கில் படாக்சான் மாகாணம் , தெற்கில் பாஞ்ச்சிர் மாகாணம் , மேற்கில் பக்லான் மாகாணம், குந்தூஸ் மாகாணம் போன்றவை உள்ளன. மாகாணத்தின் தலைநகராக தலோகுவான் நகரம் உள்ளது. இந்த மாகாணமானது பதிமூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இது 1,000 கிராமங்களைக் கொண்டது. மாகாணம் கிட்டத்தட்ட 933,700 மக்கட்தொகையைக் கொண்டதாக உள்ளது. இது பெரும்பாலும் கிராமப்புற, பல இன பழங்குடி மக்களை கொண்ட மாகாணமாகும்.[2] வரலாறு16ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து 18ஆம் நூற்றாண்டின் இடைக் காலம்வரை, இந்த மாகாணத்தை புகாரின் கான்னேட்டுகள் ஆண்டனர். 1750ஆம் ஆண்டில் ஒரு நட்பு உடன்படிக்கை ஏற்பட்டு அதனால் இப்பகுதியானது புகாராவின் முராத் பெக் என்பவரால் அகமது ஷா துரானிக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு இப்பகுதி துராணியப் பேரரிசின் ஒரு பகுதியாக ஆனது. துராணியர்களைத் தொடர்ந்து இப்பகுதியானது பராக்ச்சாய் வம்சத்தால் ஆளப்பட்டது. 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில் நடந்த மூன்று ஆங்கிலோ-ஆப்கானிய போர்களின்போது இப்பகுதி பிரித்தானியரால் தாக்கப்படவில்லை. 1964 ஆம் ஆண்டில் அப்போதைய குவாட்டகன் மாகாணமானது தகார், பக்லான், குண்டூஸ் என மூன்று மாகாணங்களாக பிரிக்கப்பட்டபோது, இந்த மாகாணம் உருவானது. 1980 களில் ஆப்கான் சோவியத் போர் நடந்தபோது, இந்த பகுதியானது புர்கானுத்தீன் ரப்பானி மற்றும் அஹமத் ஷா மசூத் ஆகியவற்றின் செல்வாக்கின் கீழ் வந்தது. இது 1990களில் வடக்குக் கூட்டணியின் கட்டுப்பட்டுக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் இப்பகுதியானது வடக்கு கூட்டணி மற்றும் தலிபான் படைகள் இடையேயான சில சண்டைகளைப் பார்த்தது. 2001 செப்டம்பர் 9 அன்று முஜாஹிதீன் தளபதி அஹமது ஷா மசூத்தை அல் காயிதா முகவர்கள் என சந்தேகப்படுபவர்களால் படுகொலை செய்யப்பட்ட இடமாக தகார் புகழ் பெற்றுள்ளது. 2015 நிலநடுக்கம்2015 அக்டோபர் 26 அன்று இந்து குஷ் பகுதியான வடக்கு ஆப்கானித்தானில் 7.5 எம்டபிள்யூ அளவுகோலில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 30,000 வீடுகள் இடிந்து, நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தனர், 1,700க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.[3] ![]() ![]() அரசியலும், நிர்வாகமும்மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் அப்துல் ஜபார் தக்வா ஆவார். ஆப்கானிய எல்லைக் காவல்படையானது (ஏபிபீ) அண்டை நாடான தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியைக் கண்காணிக்கிறது. மாகாணத்தின் அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளும் ஆப்கானிய தேசிய காவல்துறை (ஏஎன்பி) கையாள்கின்றது. ஆப்கானிய எல்லை பொலிசு மற்றும் ஆப்கானிய தேசிய பொலிசு போன்றவற்றை மாகாண காவல்துறைத் தலைவர் வழிநடத்துகிறார். இவர் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக உள்ளார். ஏஎன்பி உட்பட, மற்ற ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை (ஏஎன்எஸ்எப்) போன்றவற்றிற்கு நேட்டோ தலைமையிலான படைகளின் ஆதரவு உள்ளது. மக்கள்வகைப்பாடுமாகாணத்தின் மக்கள் தொகை சுமார் 933,700 ஆகும்.[1] இது பெரும்பாலும் பழங்குடி மற்றும் கிராமப்புற மக்களைக் கொண்ட மாகாணமாகும். தகார் மாகாணத்தின் பெரும்பான்மையான மக்களாக தாஜிக்ஸ் மக்கள் 60% உள்ளனர். மற்றும் உஸ்பெக்ஸ் 35% உள்ளனர். மீதமுள்ளவர்கள் பஷ்தூன் மக்கள், கசாரா மக்கள், பாபாய் மக்கள், கோ மக்கள், துர்க்மேன் மக்கள் ஆகிய இனத்தவராவர். அடிக்குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia