தாய்க்குந்தி மாகாணம்
தாய்க்குந்தி (Daykundi தாரி: دایکندی; பஷ்தூ: دایکنډي, வார்ப்புரு:IPA-ps), இது சில சமயங்களில் டாக்குண்டி, தெய்கோண்டி, தெய்கோண்டி அல்லது தயங்குடி என உச்சரிக்கப்படுகிறது. இது ஆப்கானிஸ்தானின் முப்பத்தி நான்கு மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் நடுப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் மக்கள் தொகை 723,980 ஆகும், இது கசாரா மக்கள் மிகுதியாக வாழும் மாகாணமாகும். தாய்க்குந்தி மாகாணமானது பாரம்பரியமாக அசாராசித் மற்றும் கசாரா இனமக்களின் பிராந்தியமாக உள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரம் நில்லி என அழைக்கப்படுகிறது. இதன் வடமேற்கில் கோர், வடகிழக்கில் பாமியான் மாகாணம், தென்கிழக்கில் கஜினி மாகாணம், தெற்கில் ஒரூஸ்கான் மற்றும் மேற்குப் பகுதியில் ஹெல்மண்டு மாகாணம் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. தாய்க்குந்திதாய்க்குந்தியானது ஒரூஸ்கான் மாகாணத்தில் உள்ள ஒதுக்குப்புறமான கசாரா மக்களின் ஆதிக்கம் கொண்ட வடக்கு மாவட்டங்களில் இருந்து 2014 மார்ச் 28 இல் உருவாக்கப்பட்டது. அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புமாகாணம் நிறுவப்பட்டு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆன நிலையில், இந்த மாகாணமானது ஒப்பீட்டில் பிற மாகாணங்களைவிட சிறந்த பாதுகாப்பை வழங்கியுள்ளதுடன், பல்கலைக்கழக நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையில் காபூலையும் வட உயர்த்தியுள்ளது. மாகாணமானது 2011 திசம்பரில் தன் பாதுகாப்பில் மாற்றத்துக்கு உள்ளானது. அது தன் சொந்த பாதுகாப்புபை ஆப்கானிய பொலிஸ் மற்றும் இராணுவத்தின் மூலம் தானே பராமரிக்கிறது.[3] ஆப்கானிஸ்தான் அரசு, என்.ஜி.ஓ.க்கள், ஐ.நா., மற்றும் நேட்டோவின் ISAF படைகள் மாகாணத்தில் மறுசீரமைப்பு தொடர்பில் சற்று ஈடுபாடு கொண்டுள்ளன. 2007 பிப்ரவரியில் ஏற்பட்ட கடுமையான மழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக, ஆப்கானிஸ்தானிற்கான ஐக்கிய நாடுகள் உதவி மையம் (UNAMA) மாகாணத்தில் ஒரு துணை அலுவலகத்தைத் திறந்தது.[4] மேலும் மாகாணத்தில் செயல்படும் சில அரசு சாரா நிறுவனங்களில் ஒன்றான ஆக்ஸ்பாம் போன்றவையும் ஐ.நா.ஏ.ஏ உள்ளீட்டவை வெள்ள நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்தன.[4] 2007 ஆம் ஆண்டு நவம்பரில், உலக உணவு திட்டத்தைச் சேர்ந்த கலப்பு உணவு உதவி மையம் பாதுகாப்புப் பணிகள் காரணமாக அதன் பாதுகாப்புப் பணிக்குத் தள்ளப்பட்டது. ஆப்கானின் உள்துறை அமைச்சகமானது, தலிபான் தீவிரவாதிகள் மாகாணத்தை ஸ்திரமின்மைக்கு மீண்டும் கொண்டுவருவதற்காக தெற்கு மாவட்டமான கஜரானில் ஊடுருவி வந்ததை உறுதிப்படுத்தியது.[5] ![]() ![]() அமெரிக்க ஐக்கிய நாடு இந்த மாகாணத்தில் புதிய அரசு நிறுவனங்களை உருவாக்கத் தொடங்கியது. கிளர்ச்சி பிரச்சனை மற்றும் உணவு பற்றாக்குறையானது 2012 ஆண்டு வரை தொடர்ந்தது. 2012 அக்டோபரில் பல அரசாங்க அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்: "அரசாங்கம் அல்லது அரசு சாரா நிறுவனங்கள் (அரசு சாரா அமைப்புகள்) இந்த நிலைமைகளை சரி செய்யவில்லை என்றால், இந்த குளிர்காலத்தில் தேகண்டி மாகாணத்தில் பல மரணங்கள் ஏற்படும்"[6] என்று. இதற்கிடையில், 150 போராளிகளுடன் ஒரு கிளர்ச்சித் தலைவர், தேகண்டி மாகாணத்தின் தலைநகரான நீலி நகருக்கு வந்து அரசாங்கத்தின் அமைதி முயற்சியை ஆதரித்துவந்து இணைந்தார்.[7] நிர்வாகம்2015 சூன் மாதம் மசாமா முரடி தாய்க்குந்தி மாகாண ஆளுனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வழக்கமாக ஆப்கானிய தேசிய காவல் துறைக்கு (ANP) தலைவராக மாகாண காவல் துறைத் தலைவர் இருப்பார். இவரே அனைத்து சட்ட அமலாக்க நடவடிக்கைகளுக்கும் பொறுப்பானவர். இவர் காபூல் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாவார். மக்கள்வகைப்பாடுதாய்க்குந்தி மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையானது ஏறக்குறைய 723,980 என மதிப்பிடப்பட்டுள்ளது.[2] இது பல இன மற்றும் பெரும்பாலும் கிராமப்புற பழங்குடி சமூகமாகும். மாகாணத்தின் மொத்த மக்கட்தொகையில் 90% கசாரா இன மக்களும் அதற்கடுத்து பஷ்தூன் மக்கள் 6.5% பேரும், பலோச்ஸ் 3.5% ஆகவும் உள்ளனர். மாகாணத்தின் அனைத்து மக்களும் இஸ்லாமை பின்பற்றுகின்றனர், இவர்களில் சியா பிரிவினர் பெரும்பான்மையினர் மற்றும் சுன்னி பிரிவினர் சிறுபான்மையினர் ஆவர். மாகாணத்தில் பேசப்படும் மொழிகள் தாரி, ஹஜராஜி, பஷ்தூ மொழி, மற்றும் பலூச்சி மொழி ஆகியவை ஆகும். மாவட்டங்கள்
பொருளாதாரம்மாகாணத்தில் வேளாண்மையானது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதுக்கும் இங்கிருந்து செல்லும் உயர்தர பாதாம் பொருட்களுக்காக இது நன்கு அறியப்பட்டுள்ளது. மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia