சமாரியம் இருசிலிசைடு (Samarium disilicide) என்பது Si2Sm என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும்.[1][2] சமாரியமும் சிலிக்கானும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. சமாரியம் சிலிசைடு, சமாரியம்(II) சிலிசைடு, சமாரியம் டைசிலிசைடு என்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது.
தயாரிப்பு
1550-1600 °செல்சியசு வெப்பநிலையில் வெற்றிடத்தில் சிலிக்கானுடன் சமாரியம் ஆக்சைடைச் சேர்த்து ஒடுக்குவதன் மூலம் SmSi2 தயாரிக்கப்படுகிறது.
இயற்பியல் பண்புகள்
சமாரியம் இருசிலிசைடு இரண்டு வேறு படிக மாற்றங்களில் உள்ளது: α-SmSi2 மற்றும் β-SmSi2 என்பன இவ்விரண்டு வடிவங்களாகும். இவை முறையே I mma என்ற இடக்குழுவில் YSi2 வகை நேர்சாய்சதுரப் படிக வடிவிலும், ThSi2 நாற்கோண வகை படிக வடிவிலும் [3]) 380 °செல்சியசு உருமாற்ற வெப்பநிலையுடன் உள்ளன.[4]
சமாரியம் இருசிலிசைடு சேர்மம் ≈1800 °செல்சியசு வெப்பநிலையில் சம அளவில் உருகுகிறது.[5]