சித்திபேட்டை மாவட்டம்![]() ![]() சித்திபேட்டை மாவட்டம் (Siddipet district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். [1] மேடக் மாவட்டம், கரீம்நகர் மாவட்டம் மற்றும் வாரங்கல் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, சித்திபேட்டை மாவட்டம் அக்டோபர், 2016-இல் புதிதாக நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சித்திபேட்டை நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் வாகனத் தகடு எண் TS–36 ஆகும்.[2] மாவட்ட எல்லைகள்சித்திபேட்டை மாவட்டம், கரீம்நகர் மாவட்டம், மேடக் மாவட்டம், வாரங்கல் கிராமபுற மாவட்டம், மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம், காமாரெட்டி மாவட்டம், யதாத்ரி புவனகிரி மாவட்டம் மற்றும் ராஜன்னா சிர்சில்லா மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டது. மக்கள் தொகையியல்3425.19 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சித்திபேட்டை மாவட்டத்தின் மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 10,65,127 ஆக உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர். நகர்புற மக்கள் தொகை 38.50% ஆகவும், கிராமப்புற மக்கள் தொகை 8405% ஆகவும் உள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 277 நபர்கள் வீதம் உள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 5.54% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 1,07,962 ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 57.75% ஆகவும், ஆண்களின் எழுத்தறிவு 67.70% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 47.87%ஆக உள்ளது. பட்டியல் சமூக மக்கள் தொகை 1,44,952 ஆகவும்; பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 1,48,162 ஆகவும் உள்ளது.[3] மாவட்ட நிர்வாகம்சித்திபேட்டை மாவட்டம் கஜ்வெல், சித்திபேட்டை மற்றும் உஸ்னாபாத் என மூன்று வருவாய் கோட்டங்களையும், 22 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது. [4][1] புதிதாக நிறுவப்பட்ட இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் வெங்கடரமண ரெட்டி ஆவார்.[5] வருவாய் வட்டங்கள்/மண்டல்கள்
கல்விஇம்மாவட்டத்தில் 1375 பள்ளிகளும், 74 இளையோர் கல்லூரிகளும், 18 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், 9 தொழில் நுட்பம் & பொறியியல் கல்லூரிகளும், 3 பாலிடெக்னிக் நிறுவனங்களும் உள்ளது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia