நாகர்கர்னூல் மாவட்டம்
![]() நாகர்கர்னூல் மாவட்டம் (Nagarkurnool district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3] மகபூப்நகர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு நாகர்கர்னூல் மாவட்டம், அக்டோபர், 2016-இல் புதிதாக நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் நாகர்கர்னூல் ஆகும். மாவட்ட எல்லைகள்6545 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட நாகர்கர்னூல் மாவட்டத்தின் வடக்கில் ரங்காரெட்டி மாவட்டம், கிழக்கில் நல்கொண்டா மாவட்டம், மேற்கிலும், தென்மேற்கில் வனபர்த்தி மாவட்டம், வடமேற்கில் மகபூப்நகர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. மக்கள் தொகையியல்6545 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட[4] நாகர்கர்னூல் மாவட்டத்தின் மக்கள் தொகை, 2011-ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 8,93,308 ஆக உள்ளது.[4] மாவட்ட நிர்வாகம்நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டை, நாகர்கர்னூல் மற்றும் கல்வகுர்த்தி என மூன்று வருவாய் கோட்டங்களையும், 20 மண்டல்களையும் கொண்டுள்ளது. மேலும் இம்மாவட்டம் 349 வருவாய் கிராமங்களும், 301 கிராமப் பஞ்சாயத்துகளும், 16 மண்டல மக்கள் மன்றங்களும், நான்கு நகராட்சிகளும் கொண்டுள்ளது.[5] புதிதாக நிறுவப்பட்ட நாகர்கர்னூல் மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக இ. சிறீதர் நியமிக்கப்பட்டுள்ளார். [6] மண்டல்கள்நாகர்கர்னூல் மாவட்டத்தின் 20 மண்டல்களின் விவரம் :
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia