மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம்
மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம் (Medchal−Malkajgiri District), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். ரங்கா ரெட்டி மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் புதிதாக துவக்கப்பட்டது.[3] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மெட்சல் நகரம் ஆகும். இம்மாவட்டத்தின் வாகன குறியீடு எண் TS–08 ஆகும்.[4] அமைவிடம்![]() இம்மாவட்டத்தின் வடக்கில் மேடக் மாவட்டம், வடகிழக்கில் சித்திபேட்டை மாவட்டம், கிழக்கில் யதாத்ரி புவனகிரி மாவட்டம், தென்கிழக்கில் ரங்காரெட்டி மாவட்டம், தெற்கில் ஐதராபாத் மாவட்டம், தென்மேற்கிலும் ரங்காரெட்டி மாவட்டம், வடமேற்கில் சங்கர்ரெட்டி மாவட்டம் எல்லைகளாக உள்ளது. மக்கள் தொகை5,005.98 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[5] மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 25,42,203 ஆகும். இம்மாவட்டம், தெலங்கானா மாநிலத்தில், ஐதராபாத் மாவட்டத்திற்கு அடுத்த இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாகும். மாவட்ட நிர்வாகம்இம்மாவட்டம் கீசரா மற்றும் மல்கஜ்கிரி என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 14 வருவாய் வட்டங்களயும் கொண்டுள்ளது.[3] புதிதாக துவக்கப்பட்ட இம்மாவட்டத்தின் முதலாவது மாவட்ட ஆட்சியர் எம். வி. ரெட்டி ஆவார்.[6] வருவாய் வட்டங்கள்/மண்டல்கள்மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தின் 14 மண்டல்களின் விவரம்:[3][7]
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia