ஜன்கோன் மாவட்டம்
![]() ![]() சன்கோன் மாவட்டம் (Jangaon district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். வாரங்கல் மாவட்டம் மற்றும் நல்கொண்ட மாவட்டங்களிலிருந்து சில பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் புதிதாக நிறுவப்பட்டது. [2]இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜன்கோன் நகரம் ஆகும். மாவட்ட எல்லைகள்2,187.50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சன்கோன் மாவட்டத்தின் வடக்கில் சித்திபேட்டை மாவட்டம், தெற்கில் சூரியபேட்டை மாவட்டம், கிழக்கில் வாரங்கல் கிராமபுற மாவட்டம், தெற்கில் சூரியபேட்டை மாவட்டம், மேற்கில் யதாத்ரி புவனகிரி மாவட்டம் எல்லைகளாக உள்ளது. மக்கள் தொகையியல்சன்கோன் மாவட்டம் 2,187.50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. [3]2011-ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மொத்த மக்கள் தொகை 5,82,457 ஆகும்.[3]பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 997 பெண்கள் வீதம் உள்ளனர். நகர்புற மக்கள் தொகை 12.6% ஆகவும், சராசரி எழுத்தறிவு 61.4% ஆகவும் உள்ளது. இம்மாவட்டம் மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் வாகனத் தகடு எண் TS–27 ஆகும். [4] மாவட்ட நிர்வாகம்சன்கோன் மாவட்டம் சன்கோன் கோட்டம், கான்பூர் கோட்டம் என வருவாய் கோட்டங்களையும், 13 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3][5] எ. தேவசேனா இப்புது மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் ஆவார்.[6] வருவாய் வட்டங்கள்சன்கோன் மாவட்டத்தின் சன்கோன் கோட்டம் மற்றும் கான்பூர் கோட்டத்திலுள்ள 13 வருவாய் வட்டங்களின் விவரம்:[5]
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia