விகராபாத் மாவட்டம்![]() ![]() விகராபாத் மாவட்டம் (Vikarabad district) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் விகராபாத் நகரம் ஆகும். ரங்காரெட்டி மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு, இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்டது.[2] மாவட்ட எல்லைகள்விகாராபாத் மாவட்டம், சங்கர்ரெட்டி மாவட்டம், ரங்காரெட்டி மாவட்டம், மகபூப்நகர் மாவட்டம் மற்றும் கர்நாடகா மாநிலத்துடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. மக்கள் தொகையியல்விகாராபாத் மாவட்டம் 3,386 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.[3] 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 8,91,405 ஆகும்.[3] இம்மாவட்டத்தில் தெலுங்கு மற்றும் உருது மொழிகள் பெருமளவில் பேசப்படுகிறது. இம்மாவட்டம் நான்கு தெலுங்கானா சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இம்மாவட்ட வாகனத் தகடு எண் TS–34 ஆகும்.[4] மாவட்ட நிர்வாகம்விகராபாத் மாவட்டம் தண்டூர் மற்றும் விகாராபாத் என இரண்டு வருவாய் கோட்டங்களையும் 18 மண்டல்களையும் கொண்டுள்ளது.[1] புதிதாக நிறுவப்பட்ட இம்மாவட்டத்தின் முதல மாவட்ட ஆட்சித்தலைவர் டி. திவ்யா ஆவார்.[5] விகாராபாத் மாவட்டத்தின் இரண்டு வருவாய் கோட்டங்களில் உள்ள 18 மண்டல்கள்:
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia