காமாரெட்டி மாவட்டம்

தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
காமாரெட்டி மாவட்டம்
కామారెడ్డి జిల్లా
کاماریڈی ضلع
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தெலங்கானா
பிரதேசம்தக்கான பீடபூமி
நிறுவிய ஆண்டுஅக்டோபர், 2016
தலைமையிடம்காமாரெட்டி
அரசு
 • நிர்வாகம்மாவட்ட ஆட்சியரகம்
பரப்பளவு
 • மொத்தம்3,652.00 km2 (1,410.05 sq mi)
 • பரப்பளவு தரவரிசை15
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்9,72,625
 • தரவரிசை15
மொழிகள்
 • அலுவல் மொழிதெலுங்கு, உருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுTS–17[2]
இணையதளம்= kamareddy.telangana.gov.in
காமாரெட்டி மாவட்டத்தின் வருவாய் கோட்டங்கள்

காமாரெட்டி மாவட்டம் (Kamareddy district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும்.[3][4]தெலங்கானா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள நிசாமாபாத் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு, அக்டோபர், 2016-இல் காமாரெட்டி மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காமாரெட்டி நகரம் ஆகும். காமாரெட்டி நகரத்தில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளது.

புவியியல்

3,652 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[1] காமாரெட்டி மாவட்டத்தின் வடக்கில் நிசாமாபாத் மாவட்டம், கிழக்கில் ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், தென்கிழக்கில் சித்திபேட்டை மாவட்டம், தெற்கில் சங்கர்ரெட்டி மாவட்டம் மற்றும் மேடக் மாவட்டங்களும், மேற்கில் மகாராட்டிரத்தின் நாந்தேட் மாவட்டம், தென்மேற்கில் கர்நாடகாவின் பீதர் மாவட்டமும் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, காமாரெட்டி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 9,72,625 ஆகும்.[1][5] இம்மாவட்ட மக்கள் தெலுங்கு மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம்

காமாரெட்டி மாவட்டம், காமரெட்டி, பன்ஸ்வாடா மற்றும் எல்லரெட்டி என மூன்று வருவாய் கோட்டங்களையும், 22 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது.[1][6][7] இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் என். சத்தியநாராயனா ஆவார்.[8]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016. 
  2. "Telangana New Districts Names 2016 Pdf TS 31 Districts List". Timesalert.com. 11 October 2016. https://timesalert.com/telangana-new-districts-list/21462/. பார்த்த நாள்: 11 October 2016. 
  3. "Kamareddy district" (PDF). Chief Commissioner of Land Administration. Archived from the original (PDF) on 9 செப்டம்பர் 2016. Retrieved 22 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "New districts map". newdistrictsformation.telangana.gov.in. Retrieved 22 August 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-08. Retrieved 2017-02-27.
  6. காமாரெட்டி மாவட்டத்தின் வருவாய் கோட்டங்களும், மண்டல்களும்
  7. "Clipping of Andhra Jyothy Telugu Daily - Hyderabad". Andhra Jyothy. Archived from the original on 9 அக்டோபர் 2016. Retrieved 8 October 2016.
  8. "K Chandrasekhar Rao appoints collectors for new districts". Deccan Chronicle. 11 October 2016. http://www.deccanchronicle.com/nation/current-affairs/111016/k-chandrasekhar-rao-appoints-collectors-for-new-districts.html. பார்த்த நாள்: 13 October 2016. 

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya