ஜக்டியால் மாவட்டம்
![]() ![]() ஜக்டியால் மாவட்டம் (Jagtial district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். கரீம்நகர் மாவட்டத்தின் ஜக்டியால் மற்றும் மெட்பள்ளி என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டு இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்டது. [1][2]இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜக்டியால் நகரம் ஆகும். இதன் பிற நகரங்கள் கொரட்லா, மெட்பள்ளி மற்றும் தர்மாபுரி ஆகும். புவியியல்3,043.23 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[3] ஜக்டியால் மாவட்டத்தின் வடக்கில் நிர்மல் மாவட்டம், வடகிழக்கில் மஞ்செரியல் மாவட்டம், தெற்கில் கரீம்நகர் மாவட்டம், தென்கிழக்கில் பெத்தபள்ளி மாவட்டம், மேற்கில் நிசாமாபாத் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது. மக்கள் தொகை2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜக்டியால் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 9,83,414 ஆகும்.[3] மாவட்ட நிர்வாகம்ஜக்டியால் மாவட்டம் ஜக்டியால் மற்றும் மெட்பள்ளி என இரண்டு வருவாய் கோட்டங்கள் கொண்டுள்ளது. இவ்விரு வருவாய் கோட்டங்களும் 18 மண்டல்களைக் கொண்டுள்ளது. [3] மண்டல்கள்ஜக்டியால் மற்றும் மெட்டப்பள்ளி வருவாய் கோட்டங்களில் உள்ள மண்டல்களின் விவரம்:[4]
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia