ஜோதி (தொலைக்காட்சித் தொடர்)
ஜோதி என்பது சன் தொலைக்காட்சியில் மே 29 முதல் 1 ஆகத்து 2021ஆம் ஆண்டு வரை வாரயிறுதி நாட்களில் இரவு 9:30 மணிக்கு ஒளிபரபப்பான மீயியற்கை மற்றும் கனவுருப்புனைவு கலந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இந்த தொடர் நந்தினி[3] என்ற தொடரின் வழித் தொடராக சுந்தர் சி. மற்றும் குஷ்பூ ஆகியோர் சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் அவினி சினிமேக்ஸ் போன்ற நிறுவனங்களின் கீழ் தயாரிக்க, ராஜ்கபூர் என்பவர் இத்தொடரை இயக்கியுள்ளார். இந்த தொடரில் மேகா ஸ்ரீ,[4][5] விஷ்ணு உன்னிகிருஷ்ணன் மற்றும் சந்தனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் சீமா, அனுராதா, கே. சிவசங்கர், அனு மோகன், சிங்கமுத்து போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் 1 ஆகத்து 2021 அன்று 13 அத்தியாயத்துடன் நிறைவு பெற்றது. இந்த தொடர் தமிழ் மொழியில் ஒளிபரப்புவதற்கு முன்பு தெலுங்கு மற்றும் வங்காளம்[6] மொழிகளில் ஒளிபரப்பானது. அத்துடன் கன்னடம்[7] மற்றும் மலையாள மொழிகளிலும் ஒளிபரபபானது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia