தம்பின் மக்களவைத் தொகுதி
தம்பின் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tampin; ஆங்கிலம்: Tampin Federal Constituency; சீனம்: 淡边国会议席) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தம்பின் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P133) ஆகும்.[5] தம்பின் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து போர்டிக்சன் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] தம்பின் மாவட்டம்தம்பின் மாவட்டம் என்பது நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் தம்பின் (Tampin) நகரம். நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரு மாவட்டம். [7] கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 123 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து தெற்கே 60 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. இந்த மாவட்டம், உள்ளாட்சிச் சட்டம் 1976-இன் விதிகள் மூலம் மறு சீரமைக்கப்பட்டது. அதன் விளைவாக, சூலை 1, 1980-இல் தம்பின் மாவட்டக் கழகம் (Tampin District Council) உருவாக்கப்பட்டது. தம்பின் மாவட்டம் முன்பு தம்பின் வாரியம் என்று அழைக்கப்பட்டது. தம்பின் மக்களவைத் தொகுதி
தம்பின் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia