பசுபதீசுவரர் கோயில், பசுபதிகோயில்

பசுபதீசுவரர் கோயில், பசுபதிகோயில்
பசுபதீசுவரர் கோயில், பசுபதிகோயில் is located in தமிழ்நாடு
பசுபதீசுவரர் கோயில், பசுபதிகோயில்
பசுபதீசுவரர் கோயில், பசுபதிகோயில்
புவியியல் ஆள்கூற்று:10°53′02″N 79°10′56″E / 10.8839°N 79.1823°E / 10.8839; 79.1823
பெயர்
பெயர்:பசுபதீசுவரர் கோயில், பசுபதிகோயில்
அமைவிடம்
ஊர்:பசுபதிகோயில், அய்யம்பேட்டை
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பசுபதீசுவரர்
தாயார்:பால்வளநாயகி

பசுபதீசுவரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் பசுபதிகோயில் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

அமைவிடம்

தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14வது கி.மீ. தொலைவில் உள்ள பசுபதிகோயில் பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கில் 0.5 கி.மீ. தொலைவில் பிரிவு சாலையில் கோயில் உள்ளது. இக்கோயில் அமைந்துள்ள இடம் கள்ளர் பசுபதிகோயில் என்றழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு அருகே உள்ள மற்றொரு புகழ்பெற்ற கோயில் புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோயில் ஆகும்.

இறைவன்,இறைவி

இக்கோயிலிலுள்ள இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பால்வள நாயகி என்றும் லோகநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்.

அமைப்பு

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் உயர்ந்த தளத்தில் அடுத்தடுத்து இரு கருவறைகள் உள்ளன. ஒரு சன்னதியில் மூலவரும், மற்றொரு சன்னதியில் உச்சிஷ்ட கணபதியும் உள்ளனர். தரைத்தளத்தில் திருச்சுற்றில் சனீஸ்வர பகவான், பைரவர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி, கஜலட்சுமி ஆகியோர் உள்ளனர்.

சிறப்பு

இக்கோயில் கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில்களில் ஒன்றாகும்.பிற்காலத்தில் காவிரி வெள்ளத்தாலும் மாலிக்காபூர், ஆற்காடு நவாப் போன்றவர்களின் படையெடுப்பின் காரணமாகவும் பேரழிவினைச் சந்தித்துள்ளது. சோழர் கால எழுத்தமைதியிலான துண்டு கல்வெட்டுகளும், கட்டுமானங்களும், ஜேஷ்டாதேவியின் சிற்பமும் சோழர் காலம் என்பதை உணர்த்துகின்றன. கடைசியாக தஞ்சாவூர் மராட்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள உச்சிஷ்ட கணபதி ஓர் அரிய சிற்பக்கலைப்படைப்பாகும்.[1]

சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலம்

சப்தமாதர்கள் வழிபட்ட ஏழு கோயில்களில், சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலமாகக் கோயில்களில், இதுவும் ஒன்றாகும். சப்தமங்கைத் தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்ற இவை கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ளன.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 என்.செல்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் 2004 சிறப்பு மலர்

படத்தொகுப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya