திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில்
பாலைவனநாதர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாச வட்டத்திலுள்ள திருப்பாலைத்துறையில் அமைந்துள்ள தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரை தலம் சிவன் கோயிலாகும். தல வரலாறுமுற்காலத்தில் பாலைச்செடிகள் அடர்ந்து காணப்பட்டதால் பாலைவனம் என அழைக்கப்பட்டது. கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கிய தாருகாவனத்து முனிவர்கள் இறைவனையே வெறுத்து அவறை அழிக்க துஷ்டவேள்வி நடத்தி, யாகத்தில் இருந்து கொடிய புலியை வரவழைத்து இறைவன் மீது ஏவினார். இறைவன் அப்புலியை கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திக்கொண்டார். மகாவிஷ்னு, பிரம்மன், வசிஷ்டர், தௌமியர், அர்ச்சுனர் ஆகியோர் வழிபட்டதலம். அமைவிடம்கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் பாபநாசத்திற்கு முன்பாக திருப்பாலைத்துறையில் இத் தலம் உள்ளது. அமைப்புராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடம், நந்தி உள்ளது. ராஜகோபுரத்தின் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் முருகனும் உள்ளனர். கோயிலின் வலப்புறத்தில் அம்மன் சன்னதி உள்ளது. சன்னதியின் முன்புறம் விநாயகர் உள்ளார். எதிரே நந்தி உள்ளது. அடுத்துள்ள கோபுரத்தை அடுத்துள்ள திருச்சுற்றில் நால்வர், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், வசிஷ்டர் பூசித்த லிங்கம், ராமலிங்கம், மகாலட்சுமி, மலையத்துவன் பூசித்த லிங்கம், 63 நாயன்மார்கள் உள்ளனர். மண்டபத்தில் நடராஜர் சன்னதியும் நவக்கிரக சன்னதியும் உள்ளன. மூலவர் கருவறைக்கு முன்பாக நந்தி, பலிபீடம் காணப்படுகிறது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடி காணா அண்ணல், பிரம்மா ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இறைவன், இறைவிஇத்தலத்து இறைவன் பாலைவனநாதர், இறைவி தவளவெண்ணகையாள். பாடியோர்இத்தலத்தைப் பற்றி திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.
சப்தஸ்தானம்திருநல்லூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகிய தலங்களாகும்.[1] நெற்களஞ்சியம்![]() திருப்பாலைத்துறையில் தஞ்சை நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பெற்ற 12 ஆயிரம் கலம் நெல்லை சேமிக்கும் அளவு கொண்ட மிகப்பெரிய நெற்களஞ்சியம் உள்ளது[2]. வட்ட அமைப்பில் கூம்பு வடிவக்கூரையுடன் ஏறத்தாழ 60 அடி உயரத்துடன் செங்கற்களால் இக்களஞ்சியம் கட்டப்பெற்றுள்ளது.[3] கோயிலின் இடப்புறத்தில் இந்த நெற்களஞ்சியம் அமைந்துள்ளது. கோவிந்த தீட்சிதர்திருப்பாலைத்துறை கோயில் கோபுரம், திருப்பாலைத்துறை நெற்சேமிப்புக்கிடங்கு தீட்சிதரின் முயற்சியில் கட்டப்பட்டவையாகும்.[4] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
படத்தொகுப்பு
|
Portal di Ensiklopedia Dunia