சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன்
சுல்தான் சலாவுதீன் அப்துல் அசீஸ் சா அல்லது சிலாங்கூர் சுல்தான் சலாவுதீன் (ஆங்கிலம்; மலாய்: Sultan Salahuddin Abdul Aziz Shah Al-Haj ibni Almarhum Sultan Hisamuddin Alam Shah Al-Haj; சீனம்: 蘇丹沙拉胡丁·阿都阿茲沙) (8 மார்ச் 1926 - 21 நவம்பர் 2001) என்பவர் 1960-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரையில் சிலாங்கூர் சுல்தான் பதவி வகித்தவர் ஆவார். மேலும் 1999-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு, அவர் இறக்கும் வரையில் மலேசியாவின் பதினோராவது பேரரசர் பதவியையும் வகித்தவர் ஆவார்.[1] பொதுசுல்தான் சலாவுதீன் அப்துல் அசீஸ் சா சிலாங்கூரின் தெங்கு லக்சமானாவாக 1 ஆகஸ்டு 1946-இல் நியமிக்கப்பட்டார்; மற்றும் சிலாங்கூரின் ராஜா மூடாவாக (முடி இளவரசர்) 13 மே 1950-இல் நியமிக்கப்பட்டார். அவரின் தந்தை, சுல்தான் இசாமுதீன் ஆலாம் சாவின் மறைவுக்குப் பிறகு, 3 செப்டம்பர் 1960-இல், சிலாங்கூரின் எட்டாவது சுல்தானாகப் பதவியேற்றார். 28 சூன் 1961-இல் சுல்தான் சலாவுதீன் அப்துல் அசீஸ் சா என்ற பட்டப் பெயருடன் முடிசூட்டு விழா நடைபெற்றது. கோலாலம்பூர் உடன்படிக்கை1 பிப்ரவரி 1974-இல், கோலாலம்பூர் மாநகரை ஒரு கூட்டரசுப் பிரதேசமாக அமைப்பதற்காக, சிலாங்கூரில் இருந்து மத்திய அரசுக்கு மாற்றும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர் சுல்தான் சுல்தான் சலாவுதீன் ஆவார்.[4] கையெழுத்திட்ட பிறகு சுல்தான் சலாவுதீன் அழுதார் என்றும் அறியப்படுகிறது. ஏனெனில் அவர் கோலாலம்பூர் நகரத்தைத் தன் சிலாங்கூர் மாநிலத்தின் பெருமைக்குரிய நகரமாகக் கருதினார். ஆனாலும் அவர் மலேசியாவின் எதிர்கால நன்மைக்காக கோலாலம்பூரை விட்டுக் கொடுத்தார். கோலாலம்பூர் மாநகரை சுல்தான் சலாவுதீன் விட்டுக் கொடுத்தற்காக, கோலாலம்பூர் - [[சிலாங்கூர் எல்லைப் பகுதியில்; கோலாலம்பூர் - கிள்ளான் நெடுஞ்சாலையில், 1981-இல், கோத்தா தாருல் எசான் (Kota Darul Ehsan) எனும் வளைவு அமைக்கப்பட்டது.[2] சா ஆலாம் உருவாக்கம்1978-இல் புதிய சிலாங்கூர் மாநிலத் தலைநகரமாக சா ஆலாம் நகரத்தை நிறுவினார். கோலாலம்பூர் ஒரு கூட்டரசு பிரதேசமாக மாறியதால் அதற்குப் பதிலாக ஒரு புதிய நவீன மாநிலத் தலைநகரம் தேவை என்றார். அந்தக் கட்டத்தில், அதாவது கோலாலம்பூர் பிரிந்து சென்ற பிறகு, கிள்ளான் நகரம் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக இருந்தது. தற்போது சா ஆலாம் மாநகரில் பல கட்டிடங்களும், சாலைகளும் சுல்தான் சலாவுதீன் பெயரால் அழைக்கப்படுகின்றன. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம்சா ஆலாம் மாநகரம் மலேசியாவில் நவீனமாக வடிவு அமைக்கப்பட்ட ஒரு புதிய நகரம் ஆகும். மலேசியாவில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரங்களில் சா ஆலாம் முதல் நகரமாகப் புகழ் பெறுகிறது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 25 கி.மீ அல்லது 16 மைல்கள் மேற்கே அமைந்து உள்ளது. 1974-ஆம் ஆண்டு கூட்டரசு பிரதேசமாக கோலாலம்பூர் அறிவிக்கப்பட்டது. அதுவரை கோலாலம்பூர் நகரம், சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாகவும், மலேசியாவின் தலைநகரமாகவும் விளங்கி வந்தது. விருதுகள்சிலாங்கூர் விருதுகள்
மலேசிய விருதுகள்
வெளிநாட்டு விருதுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia