பேரியம் பாசுப்பேட்டு
பேரியம் பாசுப்பேட்டு (Barium phosphate) என்பது Ba3(PO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பேரியத்தின் பாசுப்பேட்டு உப்பாகக் கருதப்படும் இச்சேர்மம் வெண்மை நிறத்தில் நெடியற்ற தூளாகக் காணப்படுகிறது. பேரியம் பாசுப்பேட்டு நீரில் கரையாது. பேரியம் ஆர்த்தோபாசுப்பேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. தயாரிப்புபேரியம் பாசுப்பேட்டு தூள் தயாரிப்பதற்கான பொதுவான வேதியியல் வினை:[1] 3 Ba(NO3)2 + 2 NH4H2PO4 → Ba3(PO4)2 + 2 NH4NO3 + 4 HNO3 கட்டமைப்புபேரியம் பாசுப்பேட்டின் படிக அமைப்பு இசுட்ரோன்சியம் பாசுப்பேட்டில் உள்ளதைப் போலவே, R3m இடக்குழுவுடன் கூடிய சாய்சதுரப் பிழம்புருவாகும்.[2] பண்புகள்பேரியம் பாசுப்பேட்டு அதிக ஒளிவிலகல் எண் குறியீடு, குறைந்த உருகுநிலை, குறைந்த கண்ணாடி மாற்ற வெப்பநிலை, புற ஊதா ஒளிக்கு அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் அதிக வெப்ப விரிவாக்க குணகம் போன்ற பண்புகளை வெளிப்படுத்துகிறது.[3] பயன்பாடுகள்பேரியம் பாசுப்பேட்டு தொழில்துறை பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. துடிப்புள்ள லேசர்களுக்கான சிறப்பு பண்புகளைக் கொண்ட கண்ணாடிகளைத் தயாரித்தல், கண்ணாடியிலிருந்து கண்ணாடி பிணைப்புக்கான சாலிடர்களைத் தயாரித்தல் போன்ற ஒளியியல் பயன்பாடுகள் போன்றவையும் இதில் அடங்கும். ஐதரசன்/ எரிபொருள் உணரிகளின் வளர்ச்சியிலும் இதைப் பயன்படுத்தலாம்.[3] மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia