பேரியம் கார்பைடு
பேரியம் கார்பைடு (Barium carbide) என்பது BaC2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். பேரியம் எத்திணடைடு, பேரியம் அசிட்டைலைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது.[1] கார்பைடு குடும்பத்தைச் சேர்ந்த இக்கனிமம் பேரியம் நேர்மின் அயனியாலும் (Ba2+) அசிட்டலைடு [C≡C]2−எதிர்மின் அயனியாலும் ஆக்கப்படுகிறது. தயாரிப்புகார்பன் முன்னிலையில் [2]உலோக மக்னீசியத்துடன் பேரியம் கார்பனேட்டு பொடியைச் சேர்த்து குறைத்தல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் தூய்மையற்ற சேர்மமாக பேரியம் கார்பைடைத் தயாரிக்க முடியும்.[3] 600° செல்சியசு வெப்பநிலையில் சூடான பேரியம் உலோகத்துடன் கார்பன் டை ஆக்சைடைக் சேர்த்து குறைத்தல் வினைக்கு உட்படுத்துவதன் மூலமும் பேரியம் கார்பைடை உருவாக்க முடியும்.[4] இந்த தயாரிப்பு முறைகள் அவற்றின் அதிக விளைபொருள் உருவாதல் காரணமாகவும், கார்பைடு அசிட்டிலீனை தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதாலும் பயன்படுத்தப்படுகின்றன. பேரியம் இரசக்கலவை மற்றும் கார்பன் தூள் கலவையை ஐதரசன் மின்னோட்டத்தில் சூடாக்குவதன் மூலமும் இதைத் தயாரிக்கலாம். பேரியம் ஆக்சைடை கார்பனுடன் சேர்த்து அதிக வெப்பநிலையில் குறைப்பதன் மூலம் தூய சேர்மம் தயாரிக்கப்படுகிறது.[5] பண்புகள்பேரியம் கார்பைடு கால்சியம் கார்பைடைப் போலவே வினைபுரிகிறது.[6] ஆனால் இது அதிகமாக உருகக்கூடியதாகும். தீவிர வெப்பத்திற்கு ஆளாகும்போது, பேரியம் ஆவியாகி கிராஃபைட்டின் படிகங்களை விட்டுச்செல்கிறது. அதிக வெப்பநிலையில் கரைசலில் உள்ள கார்பனையும் பேரியம் கார்பைடு உறிஞ்சும்.[5] தீங்குகள்பேரியம் கார்பைடு இரைப்பை குடல் பாதைக்கு சேதம் விளைவிப்பதோடு, தோல் மற்றும் கண்களில் எரிச்சலையும் ஏற்படுத்தும்.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia