பேரியம் அசிட்டேட்டு
பேரியம் அசிட்டேட்டு (Barium acetate) Ba(C2H3O2)2 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய பேரியம் மற்றும் அசிட்டிக் அமிலத்தின் உப்பு ஆகும். தயாரிப்புபேரியம் கார்பனேட்டுடன் அசிட்டிக் அமிலத்தை வினைபுரியச் செய்வதன் மூலமாக பொதுவாக பேரியம் அசிட்டேட்டு தயாரிக்கப்படுகிறது[2]. கரைசல் நிலையில் மேற்கொள்ளப்படும் இவ்வினையில் பேரியம் அசிட்டேட்டு படிகமாக வெளிவருகிறது. பேரியம் கார்பனேட்டுக்கு மாற்றாக இவ்வினையில் பேரியம் சல்பைடையும் பயன்படுத்த முடியும். இங்கும் கரைப்பான் ஆவியாக்கப்பட்டு பேரியம் அசிட்டேட்டு படிகமாக்கப்படுகிறது. பண்புகள்வெண்மை நிறத் துகள்களாக காணப்படும் பேரியம் அசிட்டேட்டு 0 பாகை செல்சியசு வெப்பநிலையில் அதிக அளவு கரைதிறன் பெற்றுள்ளது. அதாவது 100 கிராம் தண்ணீரில் 55.8 கிராம் அளவு பேரியம் அசிட்டேட்டைக் கரைக்க முடியும். பேரியம் அசிட்டேட்டைச் சூடுபடுத்தினால் அது பேரியம் கார்பனேட்டாக சிதைவடைகிறது. வினைகள்பேரியம் அசிட்டேட்டைக் காற்றில் சூடுபடுத்தினால் அது பேரியம் கார்பனேட்டாக சிதைவடைகிறது. மேலும் இது கந்தக அமிலம், ஐதரோ குளோரிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் போன்ற அமிலங்களுடன் வினைபுரிந்து முறையே சல்பேட்டு, குளோரைடு மற்றும் நைட்ரேட்டுகளைக் கொடுக்கிறது. பயன்கள்பேரியம் அசிடேட்டு நெசவுத் தொழிலில் நெசவுத் துணிகளில் அச்சிடும் போது நிறமூட்டியாகவும், வண்ணப்பூச்சுகள் , மெருகூட்டிகளில் மற்றும் உயவு எண்ணெய்களில் உலர்த்தியாகவும் பயன்படுத்தப்படுகிறது. வேதியியலில், மற்ற அசிட்டேட்டுகள் தயாரிக்கவும் மற்றும் கரிமத் தொகுப்பு வினைகளில் வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும்,பேரியம் அசிடேட்டு உயிரைக் கொல்லும் ஒரு வலிமையான நஞ்சாகவும் இருக்கிறது. மேற்கோள்கள்
உசாத்துணை நூல்கள்
|
Portal di Ensiklopedia Dunia