இக்கரைசலில் இருந்து நீரேறிய பேரியம் புரோமைடு படிகமாக்கப்படுகிறது (BaBr2•2H2O) . இப்படிகத்தை 120 பாகை செல்சியசுக்கு சூடாக்குவதன் மூலமாக நீரற்ற பேரியம் புரோமைடு பெறப்படுகிறது[3]
.
பயன்கள்
ஒளிப்படவியலில் உபயோகமாகும் வேதிப்பொருட்கள் மற்றும் பிற புரோமைடுகள் தயாரிப்பதற்கு பேரியம் புரோமைடே முன்னோடியாக விளங்குகிறது. பகுதிபட படிகமாக்கல் முறையில் ரேடியத்தை தூமையாக்க மேரி கியூரி பேரியம் புரோமைடை பயன்படுத்தியுள்ளார். ஏனெனில், பேரியம் புரோமைடு கரைசலில் ரேடியம் முதலில் வீழ்படிவாகிறது. ரேடியத்திற்கும் பேரியத்திற்குமான விகித வேறுபாடு கரைசலைக் காட்டிலும் வீழ்படிவில் அதிகமாக உள்ளது[4]
முன்பாதுகாப்பு
பேரியம் புரோமைடும் நீரில் கரையும் இதர பேரியம் உப்புகளும் நச்சுத்தன்மை கொண்டவையாகும். இவற்றை உட்கொள்ள நேரிட்டால் கடுமையான நச்சு விளைவுகள் உண்டாகும்.
↑
Brackett, Elizabeth B.; Breackett, Thomas E.; Sass, Ronald L. (December), "The Crystal Structures of Barium Chloride, Barium Bromide, and Barium Iodide.", The Journal of Physical Chemistry(– Scholar search), vol. 67 (published 1963), p. 2132, retrieved 2007-12-03{{citation}}: Check date values in: |date= (help); External link in |format= (help)[தொடர்பிழந்த இணைப்பு]