பேரியம் சல்பைடு(Barium sulphide) என்பது BaS என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல்சேர்மமாகும். பேரியம் கார்பனேட்டு உள்ளிட்ட பிற பேரியம் சேர்மங்களை தயாரிக்க உதவும் ஒரு முக்கியமான முன்னோடிச் சேர்மமாக பேரியம் சல்பைடு கருதப்படுகிறது. இலித்தோபோன் (ZnS/BaSO4) என்ற பல சேர்மங்கள் கலந்த ஒரு நிறமியைத் தயாரிக்கவும் BaS பயன்படுகிறது[2]. மற்ற சால்கோகெனைடுகள் போல பேரியம் சல்பைடும் மின்னணு காட்சியமைப்பில் குறைந்த அலைநீள உமிழ்வியாகச் செயல்படுகிறது. பேரியம் சல்பைடு நிறமற்றதாக இருப்பினும், பொதுவாக தூய்மையற்ற நிலையில் பல வண்ணங்களில் கிடைக்கிறது.
தயாரிப்பு
பேரைட் என்னும் கனிம வடிவில் காணப்படும் BaSO4 சேர்மத்தை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி வின்செண்டியசு காசுகியாரோலசு (1571-1624) பேரியம் சல்பைடைத் தயாரித்தார் [3]. தற்காலத்தில் காசுகியாரோலசு செயல்முறையை மேம்படுத்தி மாவுக்குப் பதிலாக கற்கரியை உபயோகித்து தயாரிக்கின்றனர். இவ்வகை வினையை உயர்வெப்பக் கார்பன் வினை என்று அழைக்கின்றனர்.
BaSO4 + 2 C → BaS + 2 CO2
காசுகியாரோலசு தயாரித்த நின்றொளிரும் போலோக்னா கல் எனப்படும் இப்பொருள் பல வேதியலர்கள் மற்றும் இரசவாதிகளின் கவனத்தை ஈர்த்தது. இப்பொருளின் மீது அவர்கள் பல சோதனைகளை மேற்கொண்டனர்.[4][5][6]கால்சைட்டும்கிப்சமும் போலோக்னோ கல் உற்பத்திக்கு பொருத்தமானவையல்ல என்றும், ஆனால் ஒரு தனிச்சிறப்புக் கனிமமான புளோர்சுபார் உற்பத்திக்கு பொருத்தமானவையாக இருக்கும் என்றும் ஆண்டிரியசு சிகிசுமண்ட் மார்கிராப் தெரிவித்தார். இறுதியில் போலோக்னோ கல்லில் இருந்து உற்பத்தியானது கால்சியம் சல்பேட்டு என்ற முடிவுக்கு வந்தார் [7].
போலோக்னோ நகருக்கு அருகிலுள்ள பேரியம் சல்பேட்டு படிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் பேரியம் சல்பைடில் இயற்கையாகக் காணப்படும் தாமிர மாசுக்கள் நின்றொளிர்தலுக்கு காரணமாக இருக்கலாம் என்று அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன [8]
பேரியம் சல்பைடு சேர்மம் சோடியம் குளோரைடு கட்டமைப்பில் படிகமாகிறது. எண்முக Ba2+ மற்றும் S2− மையங்கள் இக்கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.
பாதுகாப்பு
CaS போன்ற தொடர்புடைய மற்ற சல்பைடுகள் போலவே பேரியம் சல்பைடும் நச்சுத்தன்மை மிக்கதாகும். தண்ணீருடன் வினைபுரிய நேரிட்டால் நச்சுத்தன்மையுள்ள வாயுவான ஐதரசன் சல்பைடை வெளியிடுகிறது.
மேற்கோள்கள்
↑Lide, David R., ed. (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. ISBN0-8493-0487-3.
↑Lastusaari, Mika; Laamanen, Taneli; Malkamäki, Marja; Eskola, Kari O.; Kotlov, Aleksei; Carlson, Stefan; Welter, Edmund; Brito, Hermi F. et al. (2012). "The Bologna Stone: history's first persistent luminescent material". European Journal of Mineralogy24 (5): 885–890. doi:10.1127/0935-1221/2012/0024-2224. பன்னாட்டுத் தர தொடர் எண்:0935-1221.