விட்டலர் கோயில், அம்பி

விட்டலர் கோயிலில் தேர் வடிவத்தில் கல்லில் நிறுவப்பட்ட கட்டிடம்

விட்டலர் கோயில், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் ஹம்பி எனும் பண்டைய நகரத்தில் அமைந்த கோயில் ஆகும். பொ.ஊ. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில் பகவான் விட்டலர் எனும் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இக்கோயிலின் கட்டிடக்கலை மற்றும் ஒப்பிடமுடியாத கைவினைத்திறன் ஆகியவற்றால் நன்கு அறியப்பட்டதாகும். இது ஹம்பியில் உள்ள மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரபலமான கட்டமைப்பாக கருதப்படுகிறது. இந்த கோயில் ஹம்பியின் வடகிழக்கு பகுதியில், துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தொன்மையான சின்னமான இக்கோவிலில் ஒப்பிடமுடியாத கல் தேர் மற்றும் கண்கவர் இசைத் தூண்கள் போன்ற அற்புதமான கல் கட்டமைப்புகள் உள்ளன. ஹம்பியின் இந்த முக்கிய நினைவுச்சின்னம் பாழடைந்த நகரத்தின் முக்கிய ஈர்ப்பாகும். ஹம்பியில் உள்ள அனைத்து நினைவுச்சின்னங்களில் விட்டலர் கோயிலின் அற்புதமான கட்டக்கலை மிகப் பெரியது என்று கருதப்படுகிறது. இக்கோயில் வளாகத்தில் தேர் வடிவத்தில் கல்லில் அமைக்கப்பட்ட மண்டபம் கட்டிடக் கலைக்கு எதுக்காட்டாக உள்ளது.

வரலாறு

விஜயநகர பேரரசின் ஆட்சியாளர்களில் ஒருவரான இரண்டாம் தேவ ராயன் (பொ.ஊ. 1422–1446) ஆட்சிக் காலத்தில் விட்டலர் கோயில் கட்டப்பட்டது. கிருஷ்ண தேவராயர் ஆட்சியின் போது (பொ.ஊ. 1509–1529) இக்கோயிலின் பல பகுதிகள் விரிவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டன. தக்காணகச் சுல்தான்களால் ஹம்பி நகரம் அழிக்கப்பட்ட போது, விட்டலர் கோயிலும் சிதைக்கப்பட்டது.

மேற்கோள்கள்


வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya