மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகரத்தில் கூடாரங்கள் நிறைந்த இரவுக் காட்சி
2025 பிரயாக்ராஜ் மகா கும்பமேளா அல்லது 2025 மகா கும்பமேளா (2025 Prayag Kumbh Mela), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கிழக்கில் உள்ள பிரயாக்ராஜ் (அலகாபாத்) எனுமிடத்தில் கங்கை ஆறு, யமுனை ஆறு மற்றும் சரசுவதி ஆறுகள் ஒன்றுகூடும் திரிவேணி சங்கமத்தில் 13 சனவரி 2025 முதல் 26 பிப்ரவரி 2025 வரை தொடர்ந்து 44 நாட்கள் நடைபெறும் சிறப்பு கும்பமேளா ஆகும்.[1] கும்பமேளாவின் போது திருவேணி சங்கமத்தில் இந்து சமய பக்தர்கள் புனித நீராடுவதே நோக்கமாகும்.[2] இந்தியா முழுவதிலிருந்து 45 கோடி பக்தர்கள் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிற்து.[3] தற்போது 2025ல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகா கும்பமேளாவானது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவதாகும். இதற்கு முன்னர் மகா கும்பமேளா 1881ஆம் ஆண்டில் நடைபெற்றது.[4]யுனெஸ்கோ நிறுவனம்கும்பமேளாவைபுலப்படாத பண்பாட்டுப் பாரம்பரியமாக அறிவித்துளளது.
ஜோதிடப்படி குரு, சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒரு நேர்கோட்டில் வரும் காலங்களில் கும்பமேளா நடைபெறுகிறது.[7][8]
கும்ப மேளாவிற்கான காரணம்
திருப்பாற்கட;லை கடைந்து எடுத்த அமிர்தம் அருந்தி சாகாவரம் பெற நினைத்த தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது. அப்போது சிந்திய சில துளி அமிர்தம் அரித்துவார், உஜ்ஜைன், பிரயாக்ராஜ் மற்றும் நாசிக் ஆகிய 4 நகரங்களில் விழுந்தது என்ற புராணக் கூற்றின் அடிப்படையில், இந்த நான்கு நகரங்களில் கும்பமேளாக்கள் நடைபெறுகிறது.
மகா கும்பமேளா விழாவிற்கு உத்தரப் பிரதேச அரசு ரூபாய் 7,500 கோடி செலவு செய்தது. சுமார் 66 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடலில் பங்கெடுத்தனர். 45 நாட்கள் நடைபெற்ற விழாவின் போது வர்த்தகர்கள் ரூபாய் 3 இலட்சம்கோடிக்கு வணிகம் செய்து சாதனை படைத்தனர்.. குறிப்பாக படகோட்டிகள் நாள் ஒன்றுக்கு ரூபாய் 52,000 வருவாய் ஈட்டினர்.[11]
நிகழ்வுகள்
சனவரி 19 அன்று எரிவாயு உருளை வெடித்ததால் ஏற்பட்ட தீ, திருவிழா மைதானத்தில் குறைந்தது 18 தற்காலிக கூடாரங்களை அழித்தது. ஆனால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.[12]
பிப்ரவரி 15 அன்று, சத்தீஸ்கர் பக்தர்களை ஏற்றிக்கொண்டு திருவிழாவிற்குச் சென்ற ஒரு மகிழ்வுந்து, பிரயாக்ராஜில் பேருந்து மீது மோதியது. இதனால் மகிழ்வுந்தில் பயணம் செய்த பத்து பேரும் இறந்தார்கள்[13]
நெரிசல்
29 சனவரி 2025 அன்று, திருவிழா மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது 30 பேர் இறந்தனர். சுமார் 60 பேர் காயமடைந்தனர்.[14] அடுத்த சில மணிநேரங்களில் இரண்டாவது நெரிசலில் மூன்று வயது குழந்தை உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டனர்.[15] உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை சர்ச்சையானது. அரசாங்கத்தின் எண்ணிக்கையை விட உண்மையான இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்திய ஊடக கண்காணிப்பு அமைப்பான நியூசுலாண்ட்ரி மருத்துவமனை, காவல் துறை பதிவுகளின் அடிப்படையில், இறப்பு எண்ணிக்கை குறைந்தது 79 என்று கூறுகிறது.[16] இந்த முரண்பாடுகள் சம்பவத்தை அரசாங்கம் கையாளும் விதம் பற்றிய விமர்சனத்திற்கு வழிவகுத்தது.[17]