மீமாஞ்சம்
இந்திய மெய்யியலில், மீமாஞ்சம் அல்லது மீமாம்சம் அல்லது மீமாம்சை (Mīmāṃsā, சமக்கிருதம்: मीमांसा), என்பது வேதத்தை ஏற்கும் தத்துவப் பிரிவுகளில் ஒன்றாகும். இத்தத்துவப் பிரிவை நிறுவியர் ஜைமினி (கி. மு. 200). இது மீமாம்ச சூத்திரங்களைக் அடிப்படையாக கொண்டது.[1] [2] மீமாம்ச சூத்திரங்களுக்கு சபர சுவாமி (கி. மு. 57) விளக்க உரை எழுதியுள்ளார். இதை பூர்வ மீமாம்சம் (கர்ம காண்டம்) என்றும் உத்தர மீமாம்சம் (ஞான காண்டம்) என்று இரு காண்டங்களாக பிரித்துள்ளனர். பூர்வ மீமாம்சம் நான்கு வேதங்களுக்குப் பொருள் கூறும். உத்தர மீமாம்சத்தை தொகுத்தவர் வியாசர். நான்கு வேதங்களின் இறுதியில் உள்ள வேதாந்தங்களான உபநிடதங்களை உத்தர மீமாம்சம் என்பர். மீமாம்சை தத்துவம்மீமாம்சா சாத்திரங்கள் மனித வாழ்க்கைக்கு நான்கு இலட்சியங்களை வழியுறுத்துகிறது. அவைகள் அறம் (தர்மம்), பொருள் (அர்த்தம்), இன்பம் (காமம்), வீடு (மோட்சம்) ஆகும். அறவழியில் பொருளை ஈட்டி, அவற்றை அனுபவித்து, அந்த அனுபவ நிறைவாக வீடு பேற்றிற்கு வழி காண வேண்டும். இதற்கான வழிமுறைகளை மீமாம்சை தத்துவம் விளக்குகிறது. வேள்வி, யாகம் போன்ற சடங்குகள் மூலம் சொர்க்கம் அடைவதே மீமாம்சகர்களின் இலக்காமும்.[3] பூர்வ மீமாம்சம்ஜெய்மினி முனிவர் தொகுத்த பூர்வ மீமாம்சை எனும் கர்ம காண்டத்தை பனிரெண்டு காண்டங்களாகவும், அறுபது அத்தியாயங்களாகவும் பிரிக்கப்பட்டுப் பல சூத்திரங்களாகச் செய்யப்பட்டுள்ளது. பூர்வமீமாம்சைக்கு, சபரர், குமரிலபட்டர், பிரபாகரர் மற்றும் சாயனர் ஆகியவர்கள் மீமாம்சா சூத்திரங்களுக்கு விளக்க உரை எழுதியுள்ளனர். பூர்வ மீமாம்சையில், பிரம்மம், படைப்பு, மோட்சம் குறித்த விசாரணைகள் இல்லை. இதில் குறித்த யாகங்கள், பலி கொடுத்தல், யக்ஞங்கள் மற்றும் அக்னி ஹோத்திரம், விரதங்கள், சந்தியாவந்தணம் மற்றும் பூசை புனஸ்காரங்களை செய்வதன் மூலம் ஒரு மனிதன் எளிதாக நேரடியாக சொர்க்கத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கை உடையவர்கள். பூர்வ மீமாம்சையின் தன்மைகள்
உத்தர மீமாம்சை
இதையும் காண்கமேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia