26 அக்டோபர் 2020 (2020-10-26) – 25 பெப்ரவரி 2023 (2023-02-25)
அபியும் நானும் என்பது சன் தொலைக்காட்சியில் 26 அக்டோபர் 2020 முதல் 25 பிப்ரவரி 2023 திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு மற்றும் பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பட்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் விஷன் டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணைத்து தயாரிக்க, ரிஜா மனோஜ், வித்யா மோகன், அரவிந்து ஆகாசு, நிதிஷ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2]
கதை சுருக்கம்
மீனா மற்றும் சிவாவின் மகனான முகில் குறும்புக்காரர் மற்றும் அவரது பாட்டி ராஜேஸ்வரியின் செல்ல பேரனும் ஆவான். அபி ஒரு மென்மையான இயல்புடைய பெண். தனது தந்தையின் பணி நிமித்தமாக முகிலன் வீட்டிற்கு வரும் அபியை சிறிதும் விரும்பாத முகிலன். அவளை தனது எதிரி என்று நினைக்கிறான். அபி முகிலுடன் நண்பனாக முயற்சிக்கிறாள். இந்த தொடரின் கதை அபி மற்றும் முகில் என்ற இரண்டு குழந்தைகளைச் சுற்றியும் மீனாவின் கடந்தகால மர்மப்பதையும் சுற்றியும் நகர்கின்றது.
இந்த தொடர் ஆரம்பித்த முதல் வாரத்தில் 6.6 மில்லியன் பார்வையாளர் பதிவுகள் பெற்று தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.[3]
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
இந்த தொடர் கன்னட மொழியில் 'அபி மட்டு நண்ணு' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 21 டிசம்பர் 2020 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு உதயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.