ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி 2025 சனவரி முதல் பெப்ரவரி வரை இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இலங்கைத் துடுப்பாட்ட அணியுடன்[1] இரண்டு தேர்வுப் போட்டிகளிலும், இரண்டு பன்னாட்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியது.[2] வோர்ன்-முரளிதரன் விருதுக்காக விளையாடப்பட்ட தேர்வுப் போட்டிகள் 2023–2025 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகையின் ஒரு பகுதியாகும்.[3] பன்னாட்டு ஒருநாள் போட்டிகள் 2025 பிப்ரவரியில் நடைபெறும் 2025 ஐசிசி வாகையாளர் வெற்றிக்கிண்ணத்திற்கான ஆத்திரேலியாவின் பயிற்சியின் ஒரு பகுதியாகும்.[4] 2024 நவம்பரில், இலங்கை துடுப்பாட்ட வாரியம் (SLC) சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையை உறுதிப்படுத்தியது.[5][6] கடைசியாக ஆத்திரேலியா 2022 இல் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.[7]
தேர்வுப் போட்டிகள் காலியில் உள்ள காலி பன்னாட்டு விளையாட்டரங்கில் நடத்தப்பட்டதில்,[8] ஆத்திரேலியா 2-0 ஆகத் தொடரை வென்றது. பன்னாட்டு ஒருநாள் போட்டிகள் கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடத்தப்பட்டதில்,[9] இலங்கை அணி 2-0 ஆகத் தொடரை வென்றது.
அணிகள்
தேர்வுத் தொடர்
1-ஆவது தேர்வு
|
எ
|
|
|
|
165 (52.2 நிறைவுகள்) தினேஸ் சந்திமல் 72 (139) மேத்தியூ கூனெமான் 5/63 (18.2 நிறைவுகள்)
|
|
|
|
- நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- 3-ஆம் நாள் ஆட்டத்தின் மதிய இடைவேளைக்குப் பின்னர் மழை காரணமாக ஆட்டம் இடம்பெறவில்லை.
- யோசு இங்கிலிசு (ஆசி) தேர்வுப் போட்டி அறிமுகத்தில் இரண்டாவது வேகமான சதத்தை அடித்தார்.[13][14][15]
- ஸ்டீவ் சிமித் (ஆசி) தனது 10,000 ஆவது தேர்வு ஓட்டத்தைத் தாண்டினார்.[16]
- உஸ்மான் கவாஜா (ஆசி) தனது முதலாவது இரட்டைச் சதத்தை எடுத்தார்.[17] இலங்கையில் தேர்வுப் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் ஆத்திரேலிய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார், அத்துடன் டான் பிராட்மனுக்கு அடுத்தபடியாக 38 ஆண்டுகள் 42 நாட்கள் அகவயில் இரட்டை சதம் அடித்த இரண்டாவது மூத்த ஆத்திரேலியத் தேர்வுத் துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
- உஸ்மான் கவாஜா-ஸ்டீவ் சிமித் இணை மூன்றாவது இலக்குக்கு 266 ஓட்டங்கள் சேர்த்தது, ஆசியாவில் ஆத்திரேலிய இணை மூன்றாவது இலக்கிற்கு எடுத்த அதிகபட்சக் கூட்டணியாகும்.[18]
- நிசான் பீரிசு (இல) தேர்வுப் போட்டியின் ஒரு இன்னிங்சில் 0/189 என்ற மோசமான பந்துவீச்சைப் பதிவு செய்தார்.[19]
- மிட்செல் ஸ்டார்க் (ஆசி) பன்னாட்டுப் போட்டிகளில் தனது 700-ஆவது இலக்கைக் கைப்பற்றினார்.[20][21]
- ஜெப்ரி வான்டர்சே (இல) ஆத்திரேலியாவுக்கு எதிரான தேர்வுப் போட்டியின் ஒரு இன்னிங்சில் ஒன்பதாவது அல்லது அதற்குக் கீழே துடுப்பாடி அரைச்சதம் அடித்த முதல் இலங்கை வீரர் ஆனார்.[22]
- இது ஆத்திரேலியாவின் நான்காவது பெரிய இன்னிங்சு வெற்றியாகும்.[23]
- இது இலங்கையின் மிகப்பெரிய தோல்வியாகும்.[24]
- உலகத் தேர்வு வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இலங்கை 0.
2-ஆவது தேர்வு
|
எ
|
|
|
|
414 (106.4 நிறைவுகள்) அலெக்சு கேரி 156 (188) பிரபாத் ஜெயசூரிய 5/151 (38 நிறைவுகள்)
|
|
|
75/1 (17.4 நிறைவுகள்) உஸ்மான் கவாஜா 27* (44) பிரபாத் ஜெயசூரியா 1/20 (6 நிறைவுகள்)
|
- நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- கூப்பர் கொனலி (ஆசி) தனது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினார்.
- திமுத் கருணாரத்ன (இல) தனது 100-ஆவதும் கடைசியுமான தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[25][26]
- அலெக்சு கேரியின் 156 ஓட்டங்கள் ஆசியாவில் ஆத்திரேலிய இலக்குக் கவனிப்பாளர் ஒருவரினால் எடுக்கப்பட்ட அதிகபட்ட்ச ஓட்டங்களாகும்.[27]
- உலகத் தேர்வு வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 12, இலங்கை 0.
பன்னாட்டு ஒருநாள் தொடர்
1-ஆவது ஒருநாள்
- நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
2-ஆவது ஒருநாள்
- நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- குசல் மெண்டிசு (இல) தனது 11,000-ஆவது பன்னாட்டுத் துடுப்பாட்ட ஓட்டத்தைக் கடந்தார்.
- இது இலங்கையின் ஆத்திரேலியாவுக்கு எதிரான மிகப்பெரிய ஒருநள் வெற்றியாகும்.[28]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்