இந்தியத் துடுப்பாட்ட அணி 2024 சூலை 27 முதல் ஆகத்து 7 வரை இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கைத் துடுப்பாட்ட அணியுடன்[1][2] மூன்று பன்னாட்டு இருபது20 (இ20ப) போட்டிகளிலும் மூன்று பன்னாட்டு ஒருநாள் (ஒநாப) போட்டிகளிலும் விளையாடியது.[3][4] 2023 நவம்பரில், இலங்கை துடுப்பாட்ட வாரியம் தனது 2024 இற்கான போட்டி நாட்காட்டியை அறிவித்து இச்சுற்றுப்பயணத்தை உறுதிப்படுத்தியது.[5] கடைசியாக இந்தியா 2021-இல் இலங்கைக்கு வந்திருந்தது.[6] 2024 சூலையில், ஆட்டங்களுக்கான விளையாட்டுத் திடல்கள் அறிவிக்கப்பட்டன.[7] இது தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீரின் முதலாவது தொடரும், இந்தியாவின் முழுநேர இ20ப போட்டிகளின் தலைவராக சூர்யகுமார் யாதவின் முதலாவது தொடரும் ஆகும்.[8][9]
அணிகள்
இ20ப தொடர்
1-ஆவது இ20ப
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
2-ஆவது இ20ப
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழை காரணமாக இந்தியாவின் வெற்றி இலக்கு 8 நிறைவுகளுக்கு 78 ஆக மாற்றப்பட்டது.
3-ஆவது இ20ப
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சமிந்து விக்கிரமசிங்க (இல) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடினார்.
- சிறப்பு நிறைவு: இலங்கை 2/2, இந்தியா 4/0
ஒருநாள் தொடர்
1-ஆவது ஒநாப
- நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- முகம்மது சிராசு (இல) தனது முலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் பங்குபற்றினார்.
2-ஆவது ஒநாப
3-ஆவது ஒநாப
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- ரியான் பராக் (இந்) தனது முதலாவது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்