இலங்கையில் பல அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பல தசாப்தங்களாக ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளே ஆட்சியில் இருந்து வந்துள்ளன. தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் எந்த ஒரு கட்சியும் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில், சிறிய கட்சிகளுடன் இப்பெரும் கட்சிகள் கூட்டணி அமைத்து வந்துள்ளன. இலங்கைத் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் மட்டும் தமிழ்க் கட்சிகள் வெற்றி பெற்று வந்துள்ளன.[1]