ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை)
திருத்தந்தை ஒன்பதாம் கிளமெண்ட் (இலத்தீன்: Clemens IX; 28 ஜனவரி 1600 – 9 டிசம்பர் 1669), என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 20 ஜூன் 1667 முதல் 1669இல் தனது இறப்புவரை இருந்தவர் ஆவார்.[1][2][3] பாப்பு ஏழாம் அலெக்சாண்டரின் செயலராக இருந்தவர்.1667 சூன் 20 ல் புதிய பாப்புவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறு நாள்களுக்குப் பின் ஒன்பதாம் கிளமென்ட் என்ற பெயரில் முடிசுட்டப்பட்டார். திருச்சபையை ஒர் அரசராகத் திரு ஆட்சி புரியாமல், நல்ல தகப்பனாகச் செயல்பட்டார். அவரை யாரும் எளிதாகச் சந்திதுப் பேசலாம். வாரத்தில் இரண்டு நாள்கள் புனித பேதுருவின் பேராலயத்தின் அமர்ந்து பாவ மன்னிப்பு வழங்கினார். சலுகைகளோ பதவிகளோ பெற்றக் கொள்வதற்காக அவருடைய உறவினர்கள் யாரையும் உரோமைக்கு வர அனுமதிக்கவில்லை. பல ஆலயங்களையும் நினைவு சின்னங்களையும் இவர் உருவாக்கினார். ஆனால் ஒரு இடத்திலும் தனது பெயரைப் பதிக்க வில்லை. ஏழைகளை மிகவும் நேசித்தார். வரிகளை நீக்கினார். இறக்குமதியாகும் உணவு தானியங்கள் மீதுள்ள சுங்க வரிகளை ரத்து செய்தார். கோதுமை, மக்காச்சோளம் போன்ற உணவு பொருள்களை விற்பதற்குப் பிரபுக்கள் பெற்றிருந்த உரிமையை நீக்கினார். ஏழைகளைக்கு இலவசமாக உணவு தானியங்களை வழங்கினார். உரோமையிலிருந்த அனைத்து மக்களும் பாப்புவை அன்போடு நேசித்தனர். பாரம்பரியத்தையும் பழமையையும் விருப்பினார். இவருடைய அரியமுயற்சியினால் பிரான்ஸ் -ஸ்பெயின் நாடுகாளின் போர்ப்படைகளை ஒன்றிணைத்து துருக்கியர்களுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என்று நம்பினார். இவருடைய எண்ணம் செயல்வடிவம் பெறுமுன் துருக்கியர் கிரேட் நகரைத்தாக்கினர் இந்த படையெடுப்பு பாப்புவை மிகவும் பாதித்தது இதனால் 1669 டிசம்பர் 9இல் காலமானார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia