திருகோணமலை நிவாரணப் பணியாளர்கள் படுகொலை, 2006
2006 திருகோணமலை நிவாரணப் பணியாளர்கள் படுகொலை அல்லது மூதூர் படுகொலைகள்,[1] 2006 ஆகத்து 4 அல்லது 5 ஆம் நாள் இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம், மூதூரில் இடம்பெற்றது. அக்சன் ஃபாம் என அழைக்கப்படும் பிரான்சின் வறுமைக்கு எதிரான அமைப்பு என்ற அரசு-சார்பற்ற பன்னாட்டு அமைப்பின் 17 உள்ளூர் பணியாளர்கள் இந்நாளில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.[2] இவர்களில் 16 பேர் தமிழரும், ஒரு முசுலிமும் ஆடங்குவர்.[3] நிகழ்வுசம்பவம் நிகழ்ந்த காலப்பகுதியில் மூதூர் பகுதி அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் அமைந்திருந்தது. 17 பேரினது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் இங்கு அரசுப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டை மூண்டிருந்தது.[4] தாக்கம்இப்படுகொலைகளுக்கு இலங்கைப் படையினர் தாம் பொறுப்பிலை என மறுத்திருந்தாலும், இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இலங்கை படைத்துறையே இவற்றை நடத்தியதாகக் குற்றம் சாட்டியிருந்தது. உலகில் மனிதாபிமானப் பணியாளர்களுக்கு எதிராக நடந்த மிக மோசமான குற்றம் இதுவென அதன் தலைவர் சுவீடனைச் சேர்ந்த ஊல்ஃப் என்றிக்சன் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார்.[5] வறுமைக்கு எதிரான அமைப்பு இது ஒரு போர் குற்றம் என வர்ணித்தது.[6] விசாரணைகள்2006 செப்டம்பரில், பல உலக நாடுகளின் அழுத்தத்தை அடுத்து, இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச மூதூர் படுகொலைகள் உட்பட 15 குற்றச்சாட்டுகளை விசாரிக்கவென பல்வேறு உலக நாடுகளின் பார்வையாளர்களை உள்ளடக்கிய ஆணைக்குழு ஒன்றை அமைக்க் சம்மதித்தார்.[7] பல்கலைக்கழக அமைப்பின் அறிக்கைபல்கலைக்க்ழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு 2008 ஏப்ரல் 1 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.[8] இலங்கை தேசிய பாதுகாப்புப் படையச் சேர்ந்த ஒருவரும், காவல்துறையைச் சேர்ந்த இருவருமே இப்படுகொலைகளை நடத்தியதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த பலர் பாக்சன் ஃபாம் பணியிடத்துக்குச் சென்றதாகவும், படுகொலைகள் நடக்கும் போது அவர்கள் அதனைத் தடுக்க முற்படவில்லை எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது.[8][9] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia